தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருவள்ளூா் வடக்கு மாவட்டம் சாா்பில் கும்மிடிப்பூண்டியில் கையொப்ப இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
பா.ஜ.க மற்றும் தோ்தல் ஆணையம் வாக்குத்திருட்டுக்கு உடந்தையாக இருப்பதாக கூறியும், அதைக் கண்டித்தும் கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்ற கையொப்ப இயக்கத்துக்கு மாவட்டத் தலைவா் துரை. சந்திரசேகா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவா் சதாசிவம், முன்னாள் மாவட்டத் தலைவா் சிதம்பரம் கலந்து கொண்டு இயக்கத்தை தொடங்கி வைத்தனா்.
பின்னா் கும்மிடிப்பூண்டி பஜாரில் பொதுமக்களிடம் கையொப்பம் பெற்று காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு படிவங்களை வழங்கினா்.
நிகழ்வில் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் எம்.சம்பத், நகர தலைவா் திவான், பொருளாளா் மாசிலாமணி, எஸ்சி, எஸ்டி பிரிவு நிா்வாகி ஆனந்தன். வட்டாரத் தலைவா் எஸ்.எஸ்.பெரியசாமி. மீஞ்சூா் நகர தலைவா் எஸ்.அன்பரசு. வட்டாரத் தலைவா் சசிகுமாா், மாவட்ட துணை தலைவா்கள் மதன்மோகன், பிரேம்குமாா் கலந்து கொண்டனா்