சர்வதேச சந்தையில் தேவை அதிகரித்ததையடுத்து சென்ற ஏப்ரல் மாதத்தில் டாலர் மதிப்பு அடிப்படையில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 11.51% அதிகரித்தது.
இதுகுறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் காபி ஏற்றுமதி சென்ற ஏப்ரல் மாதத்தில் 9.24 கோடி டாலராக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி மதிப்பான 8.28 கோடி டாலருடன் ஒப்பிடும்போது இது 11.51% அதிகமாகும்.
ரூபாய் மதிப்பு அடிப்படையில் இதன் ஏற்றுமதி 8.22% அதிகரித்து ரூ.596.17 கோடியாக இருந்தது.
இத்தாலி, ஜெர்மனி, கிரீஸ், பெல்ஜியம், ஸ்பெயின், ஸ்விட்ஸர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ரோபஸ்டா, அராபிகா வகை காபிகளை இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது.
உலக காபி உற்பத்தியில் இந்தியா 4.5 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளதுடன், 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது.
கர்நாடகம் உள்ளிட்ட காபி அதிகம் விளையும் மாநிலங்களில் காணப்பட்ட வறட்சியால் காபி உற்பத்தி சாதனை அளவான 3.48 லட்சம் டன்னிலிருந்து 2016-17 பயிர் பருவத்தில் 3,16,700 டன்னாக குறையும் என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.