லக்ஷ்மி விலாஸ் வங்கியின் பகுதி நேர தலைவராக பி.கே.மஞ்சுநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) நடைபெற்ற வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் வழங்கப்பட்ட ஒப்புதல், இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்குப் பிறகு லக்ஷ்மி விலாஸ் வங்கியின் பகுதி நேர தலைவராக பி.கே. மஞ்சுநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாகம் சாரா பிரிவின் கூடுதல் இயக்குநராகவும், தனி இயக்குநராகவும் செயல்படுவார். இவரது பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும் என்று லக்ஷ்மி விலாஸ் வங்கி அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.