வணிகம்

ஈ.ஐ.டி. பாரி லாபம் ரூ.248 கோடி

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஈ.ஐ.டி. பாரி (இந்தியா) நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.248 கோடியாக இருந்தது.

DIN

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஈ.ஐ.டி. பாரி (இந்தியா) நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.248 கோடியாக இருந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.ரமேஷ் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
சர்க்கரைக்கு நல்ல விலை கிடைத்ததையடுத்து நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ஈ.ஐ.டி. பாரி நிறுவனத்தின் மொத்த விற்றுமுதல் ரூ.3,364 கோடியாக இருந்தது. 2015-16 நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய விற்றுமுதல் ரூ.4,413 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 24% சரிவாகும். லாபம் ரூ.201 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.248 கோடியாக காணப்பட்டது.
சென்ற முழு நிதி ஆண்டில் விற்றுமுதல் ரூ.14,590 கோடியாகவும், லாபம் ரூ.35 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.521 கோடியாகவும் இருந்தது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT