வணிகம்

இயக்குநர்கள், உதவித் தலைவர்களுக்கும் விருப்ப ஓய்வுத் திட்டம்: காக்னிஸன்ட்

இயக்குநர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்டோரும் தாமாக முன்வந்து பதவி விலகும் திட்டத்தை முதல்முறையாக இந்தியா மற்றும் அமெரிக்காவில் காக்னிஸன்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

DIN

இயக்குநர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்டோரும் தாமாக முன்வந்து பதவி விலகும் திட்டத்தை முதல்முறையாக இந்தியா மற்றும் அமெரிக்காவில் காக்னிஸன்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
தாமாக முன்வந்து பதவி விலகும் திட்டத்தின் கீழ் உயர் பொறுப்புகளில் உள்ள இயக்குநர்கள், இணை துணைத் தலைவர்கள், மூத்த துணைத் தலைவர்கள் உள்ளிட்டோருக்கும் விருப்ப ஓய்வுத் திட்டத்தை காக்னிஸன்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.
இளையோருக்கு வழிவிட்டு இந்த திட்டத்தின் கீழ் பணியிலிருந்து விலகுவோருக்கு 6 மாதம் முதல் 9 மாதம் வரையிலான மாத சம்பளம் ஈடாக வழங்கப்படும். இந்தியா மற்றும் அமெரிக்காவில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று காக்னிஸன்ட் தெரிவித்துள்ளது.
காக்னிஸன்ட் நிறுவனம் சட்டத்துக்குப் புறம்பான வகையில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருவதாக கூறி தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் கூட்டமைப்பு (எப்.ஐ.டி.இ) சென்னை, ஹைதராபாத் மற்றும் புணேயில் உள்ள தொழிலாளர் ஆணையத்தை ஏற்கெனவே அணுகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

அலையாடும் பொழுதிலே... ஐஸ்வர்யா தத்தா!

SCROLL FOR NEXT