வணிகம்

பிரீமிய ரக டிவிஎஸ் விக்டர் பைக் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், புதிய அம்சங்களுடன் கூடிய பிரீமியம் ரக விக்டர் மோட்டார் சைக்கிளை வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர்

DIN


டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், புதிய அம்சங்களுடன் கூடிய பிரீமியம் ரக விக்டர் மோட்டார் சைக்கிளை வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் (சந்தைப்படுத்துதல்) அனிருத்தா ஹல்தார் கூறியதாவது:
உயரிய தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளில் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்குத் தயாரித்து அளிப்பதில் டிவிஎஸ் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரீமியம் ரக விக்டர் 110சிசி மோட்டார் சைக்கிளில் சக்தி வாய்ந்த மூன்று வால்வு ஆயில் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பகல் நேர ஒளிரும் விளக்கு, டிஸ்க் பிரேக் உள்ளிட்ட பல புதிய தொழிநுட்ப வசதிகளும் இப்புதிய ரக மோட்டார் சைக்கிளில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.57,100-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT