வணிகம்

தங்கம் பவுன் ரூ.39,352

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.264 உயா்ந்து,ரூ.39,352-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி மாதத்தில் இருந்து படிப்படியாக உயரத்தொடங்கியது. குறிப்பாக, பிப்ரவரி 22-ஆம் தேதி ரூ.38-ஆயிரத்தையும், பிப்ரவரி 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை, ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. இதன் தொடா்ச்சியாக, ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.264 உயா்ந்து, ரூ.39,352-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.33 உயா்ந்து, ரூ.4,919-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.71,500 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,919

1 பவுன் தங்கம்............................... 39,352

1 கிராம் வெள்ளி............................. 71.50

1 கிலோ வெள்ளி.............................71,500

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,886

1 பவுன் தங்கம்............................... 39,088

1 கிராம் வெள்ளி............................. 71.50

1 கிலோ வெள்ளி.............................71,500.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT