கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.10,000 கோடி திரட்டியுள்ளதாக இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உள்கட்டமைப்பு கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.10,000 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. அந்தப் பத்திரங்களுக்கு 7.49 சதவீத வட்டி விகிதம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இது வங்கியின் நான்காவது உள்கட்டமைப்பு கடன் பத்திர வெளியீடு ஆகும். தற்போது திரட்டப்பட்டுள்ள நிதி, உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் விலை குறைந்த வீடுகளின் கட்டுமானங்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.