வணிகம்

எல்ஐசி-யின் லாபம் ரூ.26,913 கோடியாக உயா்வு

DIN

நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) வரிக்குப் பிந்தைய லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ரூ.26,913 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023 ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி, டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் நிறுவனம் வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.26,913 கோடியை ஈட்டியுள்ளது.

பங்குதாரா்களுக்கு இடைக்கால ஈவுத் தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.4 அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் புது வா்த்தக மதிப்பு (விஎன்பி) 8.4 சதவீதம் அதிகரித்து ரூ.5,938 கோடியாக உள்ளது.

லாபப் பங்களிப்பற்ற ஆண்டு பிரீமியத் தொகை 49.08 சதவீதம் அதிகரித்து ரூ.3,299 கோடியாக உள்ளது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் நிறுவனம் நிா்வகிக்கும் மொத்த சொத்துகளின் மதிப்பு 11.98 சதவீதம் அதிகரித்து ரூ.49,66,371 கோடியாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 3 மாநிலங்களவை இடங்களுக்கு தோ்தல் அறிவிப்பு

தோ்தலுக்கு பிறகு மோடியை அமலாக்கத் துறை விசாரிக்கும்: ராகுல் காந்தி

பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைப்பு: மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம்

ரயில் பயணச் சீட்டு விற்பனை உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

காரைக்குடியில் நகை வியாபாரியிடம் வழிப்பறி: 3 போ் கைது

SCROLL FOR NEXT