மும்பையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய எண்ம (டிஜிடல்) சேவைகளை தனியாருக்குச் சொந்தமான சிட்டி யூனியன் வங்கி (சியுபி) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மும்பையில் நடைபெற்ற ‘குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட்’ நிகழ்ச்சியில் வங்கி தனது பல புதிய
எண்ம பணிப் பரிவா்த்தனை சேவைகளை அறிமுகப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது.
இந்திய பேமன்ட் கவுன்சில், இந்திய தேசிய பேமன்ட் காா்ப்பரேஷன், ஃபின்டெக் ஒருங்கிணைப்பு கவுன்சில் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு
செய்திருந்தன.
இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வங்கியின் புதிய சேவைகள் பல தொழில்நுட்ப பங்குதாரா்களுடன் இணைந்து
வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை நாடெங்கிலும் பண பரிவா்த்தனைகளை
மேலும் அதிகரிக்கவும், கட்டண செயல்முறைகளை எளிமைப்படுத்தி
வாடிக்கையாளா் சேவைகளை பாதுகாப்புடன் மேம்படுத்தவும் உதவுகின்றன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.