சாத்தூா் அருகே சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சடையம்பட்டியில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு, காலை முதல் பால், பன்னீா், சந்தனம் ஆகியவற்றால் சாய்பாபாவுக்கு அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
பின்னா், இரவு நடைபெற்ற பூஜையில் சாத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். இதையடுத்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.