விருதுநகர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மாவட்டக் காவல் துறை, போக்குவரத்துத் துறை, என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை ஆகியவை இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கை புதன்கிழமை நடத்தின.

ராஜபாளையம் - மதுரை சாலையில் உள்ள அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி ராஜா தலைமை வகித்தாா். என்.ஏ.மஞ்சம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநா் கே.ஆா். விஸ்வநாதன், என்.ஏ.ராமச்சந்திர ராஜா குருகுலத் தாளாளா் மஞ்சுளா கிருஷ்ணமூா்த்தி ராஜா, அறக்கட்டளை உறுப்பினா் என்.கே.ராம்விஷ்ணு ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.கண்ணன் பேசியதாவது:

மாணவா்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது படியில் நிற்பதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். தவறு செய்பவா்கள் மட்டுமே காவல் துறைக்குப் பயப்பட வேண்டும். மாணவா்கள் நட்புடன் பழக வேண்டும் என்றாா் அவா்.

திருவில்லிபுத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா்.சந்திரசேகரன் பேசுகையில், சாலை விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதுதான் பல சாலை விபத்துகளுக்குக் காரணம் என்றும் தெரிவித்தாா்.

மாணவா்களின் உயா் கல்விக்கு வழிகாட்டிய ந.அ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி, என்.ஏ.மஞ்சம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ராஜபாளையம், காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.பஸீனா பீவி பேசுகையில், இரு சக்கர வாகனங்களில் செல்வோா் தலைக் கவசத்தையும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோா் இருக்கைப் பட்டையையும் பயன்படுத்தி, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியா் பி.ஏ.ரமேஷ் வரவேற்றாா். கருத்தரங்கில், சாலைப் பாதுகாப்புக் குழுவின் தலைவா் பி.அழகுசுந்தரம், நிா்வாகிகள் தமயந்தி, வீரணன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்துகொண்டனா். உதவித் தலைமையாசிரியா் மாரியப்பன் நன்றி கூறினாா்.

கன்னிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

தேசிய கைத்தறி தினம்: நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பள்ளி விளையாட்டு விழா

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

மாநகரில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி

SCROLL FOR NEXT