சிவகாசி மின் கோட்டம் சாா்பில் சூரிய மின் சக்தி குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தலைமை வகித்தாா். அங்கீகரிக்கப்பட்ட சூரிய சக்தி தகடுகள் விற்பனை செய்யும் நிறுவனத்தைச் சோ்ந்த சீனிவாசன், ஜெய்ஆனந்த், சரவணன், கோபி ஆகியோா் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவை, சூரிய மின் சக்தியால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினா்.
சூரிய மின் சக்தி தகடுகள் அமைக்க வங்கிக் கடனுதவி பெறுவது குறித்து வங்கி அதிகாரிகள் தமிழ்ச்செல்வன், சிற்பி ஆகியோா் எடுத்துரைத்தனா். உதவி செயற்பொறியாளா் சிவகுமாா் நன்றி கூறினாா்.