புதுசூரங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள். 
விருதுநகர்

புதுசூரங்குடியில் நிழல் குடை அமைக்கக் கோரி மறியல்

சாத்தூா் அருகே புதுசூரங்குடி கிராமத்தில் நிழல் குடை அமைக்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

சாத்தூா் அருகே புதுசூரங்குடி கிராமத்தில் நிழல் குடை அமைக்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புதுசூரங்குடி கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிழல் குடை இல்லாததால் கிராமத்தின் நுழைவாயில் பகுதியில் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக காத்திருந்து அவதியடைந்து வருகின்றனா்.

எனவே அங்கு நிழல் குடை அமைக்கக் கோரி சனிக்கிழமை கிராம மக்கள் சாத்தூா்- புதுசூரங்குடி சாலையில் அமா்ந்து பேருந்தை சிறைப் பிடித்து சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகு கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

SCROLL FOR NEXT