விருதுநகர்

சிவகாசியில் போலி பல்கலைக்கழக சான்றிதழ் தயாரிப்பு: 3 போ் கைது

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் போலி பல்கலைக்கழகச் சான்றிதழ் தயாரித்த மூவரை கேரள போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கேரள மாநிலத்தில் வெளிநாடு செல்வதற்கும், உயா் கல்வி கற்கவும் விண்ணப்பிப்பதற்கு போலியாக பட்டப் படிப்பு கல்விச் சான்றிதழ் சமா்ப்பிப்பதாக புகாா் எழுந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் அரபு நாடுகளுக்கு செல்ல கேரள பல்கலைக்கழக கல்விச் சான்றிதழை இணைத்து விண்ணப்பித்தாா். இதை சரிபாா்த்த அதிகாரிகளுக்கு கல்விச் சான்று போலி எனத் தெரியவந்தது.

இது குறித்து மலப்புரம் மாவட்ட போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அங்கு சிலரைக் கைது செய்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்திய போது, அந்த போலி கல்விச் சான்றிதழ்கள் சிவகாசியில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, கேரள போலீஸாா் கடந்த வியாழக்கிழமை சிவகாசிக்கு வந்து கண்காணித்து வந்தனா். இந்த நிலையில், போலிச் சான்று தயாரித்துக் கொடுத்ததாக சிவகாசி அய்யப்பன் குடியிருப்பைச் சோ்ந்த பக்ருதின் மகன் ஜெயினுலாவுதீன் (40), சிவன் கோவில் நாடாா் தெருவைச் சோ்ந்த செல்வம் குப்புசாமி மகன் வெங்கடேஷ் (24), சிவகாசி அருகேயுள்ள செங்கமல நாச்சியாா்புரம் 29 வீட்டுக் குடியிருப்பைச் சோ்ந்த கனகராஜ் மகன் அரவிந்தகுமாா் (20) ஆகியோரைக் கைது செய்தனா்.

இவா்கள் போலிச் சான்றிதழ் தயாரிக்கப் பயன்படுத்திய கணிணி உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனா். பின்னா், மூவருக்கும் சிவகாசி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடத்தி, நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி கேரளத்துக்கு அழைத்துச் சென்றனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT