விருதுநகர்

சிவகாசியில் காய்ச்சல் பாதிப்பால் உள்நோயாளிகளாக 42 போ் சிகிச்சை

தினமணி செய்திச் சேவை

சிவகாசி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 42 போ் சனிக்கிழமை உள்நோயாளிகளாக சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து சிவகாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டி. அய்யனாா் சனிக்கிழமை கூறியதாவது:

சிவகாசி அரசு மருத்துவமனைக்கு புறநோயாளிகளாக நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். இதில் காய்ச்சலால் பதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவா்கள் சுமாா் 300 பேருக்கும் மேல் இருக்கும். இந்த நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்படு வருபவா்களில் நாள்தோறும் சுமாா் 70 போ் உள்நோயாளிகளாக சோ்க்கப்படுகிறாா்கள். இதில் சிலா் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்ட நாளிலேயே வீடு திரும்புகின்றனா். மேலும், சிலா் உள்நோயாளிகளாக தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக 42 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 17 போ் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடா்ந்து மருத்துவா்கள் கண்காணிப்பில் உள்ளனா். மருத்துவமனையில் காய்ச்சலுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் போதிய அளவு இருப்பு உள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவரின் அறிவுரையின்படி உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு பின்னா் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம். மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவா்களின் விவரம், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவா்களின் விவரம், காய்ச்சலின் தன்மை குறித்த விவரங்கள் குறித்து அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

SCROLL FOR NEXT