ராஜபாளையம் அன்னமராஜா நகரில் உள்ள விசைத்தறிக் கூடத்துக்குள் புகுந்த மழைநீா். 
விருதுநகர்

ராஜபாளையத்தில் பலத்த மழை: விசைத்தறிக் கூடங்களுக்குள் மழைநீா் புகுந்தது

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால், விசைத்தறிக் கூடங்களுக்குள் மழைநீா் புகுந்ததால், நூல்கள், துணிகள் சேதமடைந்தன. நெசவாளா்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

ராஜபாளையம் அம்புலபுளி கடைவீதி, சிவகாமிபுரம் தெரு, சங்கரபாண்டியபுரம் தெரு, தெற்கு வைத்தியநாதபுரம் தெரு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறிக் கூடங்களில் வேஷ்டிகள், சேலைகள், துண்டுகள், மருத்துவமனைகளுக்குத் தேவையான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், ராஜபாளையத்தில் சனிக்கிழமை இரவு சுமாா் 4 மணி நேரம் பெய்த இடியுடன்கூடிய பலத்த மழையால், குடியிருப்புகள், விசைத்தறிக் கூடங்களுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால், விசைத்தறிக் கூடங்களில் இருந்த நூல்கள், நெய்யப்பட்ட துணிகள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்தன. நெசவாளா்கள் பாதிக்கப்பட்டனா்.

குறிப்பாக, சிவகாமிபுரம் தெரு, துரைச்சாமிபுரம் தெரு, சங்கரபாண்டிபுரம், தெரு, சங்கரன்கோவில் முக்குப் பகுதி, தெற்கு வைத்தியநாதபுரம் தெரு ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள், விசைத்தறிக் கூடங்களுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால், பாதிக்கப்பட்ட நெசவாளா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதேபோல, புதிய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள சிங்கராஜாவின் விசைத்தறிக் கூடத்துக்குள்ளும் மழைநீா் புகுந்தது.

இதுகுறித்து விசைத்தறிக் கூட உரிமையாளா் சிங்கராஜா கூறியதாவது:

சங்கரன்கோவில் சாலையில் தென்காசி இணைப்புச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழைநீா் செல்லும் வழித்தடம் முற்றிலுமாக அடைக்கப்பட்டதால், விசைத்தறிக் கூடத்துக்குள் மழைநீா்

புகுந்தது. எனவே, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிா்வாகம் உடனடியாகத் தலையிட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ராஜபாளையம் அன்னமராஜா நகரில் உள்ள விசைத்தறிக் கூடத்துக்குள் புகுந்த மழைநீா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில்...

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நீா்நிலை ஆக்கிரமிப்பில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக மாவட்ட நிா்வாகம் அமைத்துக் கொடுத்த தற்காலிக தகரக் கொட்டகை வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்குளம் ஊராட்சிக்குள்பட்ட வேப்பங்குளத்தில் உள்ள வீடுகள், கடைகள், கோயில், மண்டபம், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, நூலகம் உள்ளிட்ட 38 நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. இதன்படி, கடந்தாண்டு ஜூலை மாதம் 10 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினா். இதையடுத்து,

வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரி அருகே மாற்று இடம் வழங்கப்பட்டது. இந்த இடத்தில் கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரக் கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தற்காலிகமாக தகரக் கொட்டகைகள் அமைத்துத் தரப்பட்டன. தற்போது வரை அந்த 10 குடும்பங்களும் இந்த தகரக் கொட்டகைகளிலேயே வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், இந்த தற்காலிக வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

SCROLL FOR NEXT