சிலர் வெளியில் சென்றாலும் கடுமையான வெய்யிலில் சென்றாலும் மேக் - அப் போடுவதில்லை. சருமத்திற்கு நல்லதல்ல என்று கூறி தவிர்க்கிறார்கள்.
சருமத்தை வறண்டுபோகச் செய்யாமல், நீரேற்றத்துடன் சருமத்தைப் பாதுகாத்தால் போதுமானதுதான்.
எனினும் சருமத்தை சுத்தம் செய்ய மாய்சரைசர், கிளென்சர், சன் ஸ்க்ரீன் ஆகியவற்றைப் பயன்படுத்துவது நல்லது.
சருமத்தின் பாதுகாப்புக்காக வெய்யிலில் செல்லும்போது சன்ஸ்கிரீனாவது போட வேண்டியது அவசியம்.
உங்கள் தோற்றம் கெடாதவாறு செயற்கை ரசாயனங்கள் இல்லாத சில தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம்.
உங்களை, உங்கள் சருமத்தை மேலும் அழகாகக் காட்டுவதற்கு, சிறிது மேக் - செய்வதில் தவறில்லை.
காற்று மாசு,வெப்பம் அதிகமுள்ள பகுதிகளில் இருப்போர் குறிப்பாக வெளியில் செல்லும்போது சருமத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதேநேரத்தில் அதிகமான மேக்-அப் சரும பாதிப்பை ஏற்படுத்தும்.