வீணையும் வாசிப்பார் நாவலும் எழுதுவார்!
புது தில்லியில் இருக்கும் அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியன் ஸ்டடீஸ், அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழக இசைப் பேராசிரியர் ரிச்சர்ட் உல்ப் இந்த ஆண்டு "ஃபுல்பிரைட் பெலோஷிப்' பெற்றிருக்கிறார். ரிச்சர்ட்
புது தில்லியில் இருக்கும் அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியன் ஸ்டடீஸ், அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழக இசைப் பேராசிரியர் ரிச்சர்ட் உல்ப் இந்த ஆண்டு "ஃபுல்பிரைட் பெலோஷிப்' பெற்றிருக்கிறார். ரிச்சர்ட் உல்ப் சென்னையில் ரங்கநாயகி ராஜகோபாலனிடம் வீணை கற்று வந்தார். கூடவே மதுரையில் கமலா ராமமூர்த்தியிடம் கர்நாடக இசையும் கற்றார்.
""என் குரு ரங்கநாயகி ராஜகோபாலனுக்கு வயது 80-ஐத் தாண்டிவிட்டது. கட்டிலில் அமர்ந்தபடி, வீணையை மடியில் வைத்துக்கொண்டு வாசிக்கச் சொல்லிக் கொடுப்பார். அவருக்கு உடல் நிலை சரியாக இல்லை. நிறைய நோய்கள். ஆனால் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தால் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்'' என்று குருவைப் புகழ்கிறார் உல்ப்.
ஜூன் மாதம் முதல் தேதியில் சென்னை வந்தவர், இந்த ஒரு மாதத்துக்குள் 1. வலஜி ராகத்தில் ஜாலந்தர 2. நாட்டக்குறிஞ்சியில் "மனசு விஷய' 3. காம்போஜியில் "மா ஜானகி'. 4. லதாங்கியில் "அபராதமுல' 5. தர்மவதியில் "பஜன úஸய' 6. சுநாத விநோதினியில் தேவாதி தேவ என்று ஆறு கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டு விட்டாராம்.
""ரிச்சர்ட் உல்ப் மூன்று வருடங்களுக்கு முன்பு அங்கே பாஸ்டன் பிரான்டைஸ் பல்கலைக்கழகத்தில் கீரவாணியில் ராகம்-தானம்-பல்லவி வாசித்தார். திஸ்ர திரிபுட தாளம். மூன்று காலங்களும் வாசித்தார். எதையும் கிரகித்துக்கொள்வதில் கெட்டிக்காரர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சி வழங்கினார் உல்ப். "விஜயஸ்ரீ' ராகத்தில் "வர நாரத', சாயா தரங்கிணியில் "கிருப்சூட' இரண்டும் வாசித்தார். முறையாக வீணை கற்றுக் கொண்டுவந்தாலும், முற்றிலும் புதிய இசையை, அதிலும் புதிய கீர்த்தனையைத் தெரிந்துகொண்டு சாதகம் பண்ணி வீணையில் வாசிப்பது சுலபமல்ல. அவர் அசாத்திய உழைப்பாளி. அதனால்தான் மிகவும் கஷ்டமான "கிருப்சூட' கீர்த்தனையை அவரால் பிரமாதமாக வாசிக்க முடிந்தது'' என்கிறார் உல்ப்புக்கு மிருதங்கம் வாசிக்கும் மாலி.
இந்திய இசை, பாகிஸ்தானிய இசை இரண்டையும் கற்று வரும் உல்ப், ஆதிவாசிகள் இசை பற்றிய ஆய்வில் ஈடுபட்டு, நீலகிரியில் வசிக்கும் இருளர் இனத்தவர்களின் இசையைப் பதிவு செய்தவர். தர்மபுரி பகுதியில் வழங்கப்படும் "ஒப்பாரி' இசையைப் பற்றியும் அறிந்துகொண்டிருக்கிறார். ஒரு நூலையும் எழுதி அவருடைய பல்கலைக்கழகம் மூலம் வெளியிட்டிருக்கிறார். நின்று நிறுத்தி, அழகாகத் தமிழும் பேசுகிறார்.
தற்போது இவர் எழுதிக்கொண்டிருக்கும் நூல் "தி வாய்ஸ் இன் தி ட்ரம்', கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். "முழுக்க முழுக்க இசை பற்றியா?' என்று கேட்ட போது,
""அல்ல. இது கொஞ்சம் நாவல் மாதிரி இருக்கும். சுவாரசியமாக இருக்கும். இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட இருக்கிறது'' என்றார் உல்ப், உதட்டில் சிறு புன்னகையுடன்! நான் பாட்டுக்கு இசை, ஆய்வு, ஆராய்ச்சி என்று ரொம்பவே அகடமிக்காக இருந்தேன். மாலிதான் என்னை மீண்டும் இசை நிகழ்ச்சிகளில் கொண்டுவந்து விட்டார்'' என்கிறார் உல்ப்.
நீலகிரியில் ஒரு கச்சேரி இருக்கிறதாம். இங்கே சென்னையில் ஒரு கச்சேரி வாசிக்கிறாராம்.