தினமணி கதிர்

சிரி... சிரி... 

DIN

• கணவன்: வேலைக்காரி கூட ஏன் சண்டை போடுறே?
மனைவி: அவ வேலைக்கு வந்த போதே, என்னை 
உன் மாமியார் மாதிரி நினைச்சுக்கோம்மான்னு 
சொல்லியிருக்கா!
- கு.அருணாசலம், தென்காசி.

• "எப்படி பாஸ் உங்க பல் உடைஞ்சது?''
"என் மனைவி சுட்ட முறுக்கைச் சாப்பிட்டேன்''
"வேணாம்னு சொல்லியிருக்கலாம்ல?''
"எதுக்கு அத்தனை பல்லும் உடையவா?''
- ஆர். அஞ்சனாதேவி, மாத்தூர்.

• "டவுன் பஸ் பின்னாடி ஓடி வந்தேன். ஏழு ரூபாய் மிச்சம்''
"ஆட்டோ பின்னாடி ஓடி வந்தா 60 ரூபாய் மிச்சமாகி 
இருக்குமே''

• "தூக்கத்திலே நடக்குற வியாதிக்கு மருந்து தந்தேனே... 
ஏதாவது மாற்றம் தெரியுதா?''
"தெரியுது டாக்டர்... இப்போது நடக்கும்போது தூக்கம் 
வருது டாக்டர்''
-டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

* "ஏங்க இந்த வீட்டில ஒண்ணு 
நான் இருக்கணும். இல்லை 
உங்க அம்மா இருக்கணும்''
"நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க... வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்''
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

* "ஆடி தள்ளுபடியிலே நிறைய 
ஜவுளி வாங்கிட்டீயே... 
உன் கணவர் என்ன செய்வார்?''
"ஆடிப் போயிடுவார்''
-ம.வேதவள்ளி. பொரவச்சேரி.

* "என்ன தலைவர் தப்புக் கணக்கு எழுதி மாட்டிக்கிட்டாரா?''
"ஆமாம்... திறந்த வெளி 
அரங்கத்துக்கு செட் போடன்னு பெரிய தொகை எழுதியிருக்காரு''
எஸ்.மோகன், கோவில்பட்டி.

* "உங்க படத்துக்கு ஏன் "எங்கேயோ கேட்ட கதை'ன்னு டைட்டில் 
வச்சிருக்கீங்க?''
"எல்லாம் ஒரு தற்காப்புக்குத்தான்''
- பி.பாலாஜிகணேஷ், 
கோவிலாம்பூண்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

SCROLL FOR NEXT