"பெண்குயின்'படத்தைத் தொடர்ந்துரஜினியின் "அண்ணாத்த', செல்வராகவனுடன் "சாணி காயிதம்' படங்களில் நடித்து வருகிறார்கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் நடிகைகீர்த்தி சுரேஷ் துபாய்க்குச்சுற்றுலா சென்றுள்ளார்.அங்குஎடுக்கப்பட்டபுகைப்படங்களைவெளியிட்டுள்ளார்.
---------------------------------------------
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தனது 65 - ஆவது படத்தில் நடித்து வருகிறார். வெளிநாட்டில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து படக்குழு இந்தியா திரும்பவுள்ளது. தற்போது விஜய், ஜார்ஜியாவில் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இதன் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே பரவிவருகிறது.
---------------------------------------------
"பிக் பாஸ் சீசன் 3' மூலம் அறிமுகமானவர் லாஸ்லியா. இதன்பின் தற்போது லாஸ்லியாவின் நடிப்பில் மொத்தம் நான்கு படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒரு படத்தில் தன்னுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த, தர்ஷனுடன் இணைந்து ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இவர் நடித்து வரும் "ப்ரண்ட்ஷிப்' படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
---------------------------------------------
தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக இருக்கும் பெரிய நடிகர்களின் படங்களில் ரஜினியின் "அண்ணாத்த' படமும் உள்ளது. ஓரளவிற்கு படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அங்கு எடுக்கப்பட்ட ரஜினி-சிவாவின் ஒரு புகைப்படமும் வெளியாகி இருந்தது.
---------------------------------------------
"அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு மே 10-க்குள் முடிந்துவிடும் என்றும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜுன் மாதம் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
---------------------------------------------
தனது நீண்டநாள் காதலியான ஜுவாலா கட்டாவை மணந்தார் விஷ்ணு விஷால். அவரது தகவல்படி அவருக்கு கடந்த ஏப்ரல் 22- ஆம் தேதி பதிவுத் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் அவர்களின் கொண்டாட்ட புகைப்படங்கள் நிறைய வெளியாகிய வண்ணம் இருந்தன.
இந்த நேரத்தில் தான் விஷ்ணு மறுமணம் செய்திருக்கும் ஜுவாலா கட்டாவின் முதல் கணவரின் புகைப்படம் ஒன்றும் வெளியாகி அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
---------------------------------------------
அதுல்யா பெயரில் முகநூல் பக்கத்தில் போலிக்கணக்கு தொடங்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து தெரிய வந்த அதுல்யா, உடனே அந்தப் போலிக்கணக்கு குறித்து தன்னுடைய ரசிகர்களை எச்சரித்துள்ளார்.
---------------------------------------------
"முகநூல் பக்கத்தில் யாரோ ஒருவர் போலி கணக்கை உருவாக்கி, திரைப்படத்துறையில் எனக்கு தெரிந்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்புவது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. ஏற்கெனவே அது குறித்து புகாரளித்துள்ளேன். நான் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இல்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். தயவு செய்து இந்த கணக்கை ரிப்போர்ட் செய்யுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
---------------------------------------------
எச்.வினோத் இயக்கத்தில் "வலிமை' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தின் முதல் பார்வை மே 1 - ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் "நேர்கொண்ட பார்வை', "வலிமை' என இரண்டு படங்களுக்கும் சேர்த்து நடிகர் அஜித்திற்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் தொடங்கும் முன்பே அஜித்திற்கு முழு சம்பளத்தையும் செட்டில் செய்துவிட்டாராம்.
இதனையடுத்து மூன்றாவது படத்தையும் தயாரிப்பதாக போனி கபூர் கேட்டுள்ள நிலையில், அதற்கு அஜித் நோ சொல்லிவிட்டாராம்.
---------------------------------------------
இந்திய அளவில் கரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது.
இதனால் தற்போது ஒட்டுமொத்த மக்களும் ஸ்தம்பித்து போய் உள்ளனர். மேலும் சினிமாத்துறையும் மீண்டும் ஓ டி டி தளத்தில் படங்களை வெளியிடும் நிலைக்கு வந்துள்ளது. ஆம், திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்து வந்த முன்னணி நடிகர்களின் படங்கள் தற்போது ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளன.
அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதியின் "துக்ளக் தர்பார்' ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.