தினமணி கதிர்

சிரி... சிரி...

'இது யாரோ விஷமிகள் செய்த வேலைதான், மன்னா !''

தினமணி செய்திச் சேவை

'இது யாரோ விஷமிகள் செய்த வேலைதான், மன்னா !''

'எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே?''

'போர் ஓலையும் டூப்ளிகேட்... அதை எடுத்து வந்ததும் கிராபிக்ஸ் புறா, மன்னா!''



'நர்ஸ் கூட செல்பி எடுத்துக்கிட்டீங்களா?''

'இல்லையேம்மா!''

'பொய் சொல்லாதீங்க... மெடிக்கல் பில்லுல 'செல்பி ஃபீஸ்' னு நூறு ரூபா சேர்த்திருக்காங்களே!''



'கடவுள்தான் உங்க மாமாவைக் காப்பாத்தி இருக்காருன்னு அவர்கிட்டச் சொன்னது தப்பாப் போச்சு, சிஸ்டர்!''

'என்னாச்சு டாக்டர்?''

' 'தேங்க் காட் !' னு சொல்லிட்டு ஃபீஸ் கொடுக்காமல் கிளம்பிட்டாரு!''



'போன மாதம்தானே கப்பம் செலுத்தினோம்... மீண்டும் அண்டை நாட்டிலிருந்து புறா வந்திருக்கிறதே, அமைச்சரே?''

'பயம் வேண்டாம்! நம் அரண்மனை புறா மீது காதல் வயப்பட்டுத்தான் இந்த முறை வந்திருக்கிறது, மன்னா!''

-வி.ரேவதி, தஞ்சை.

'அஞ்சுக்கும் பத்துக்கும் அலையா அலைஞ்சேன்!''

'அடப்பாவமே... அஞ்சு மணி நேரமாவா அலைஞ்சே?!''



'நன்னடத்தைச் சான்று எப்படி வாங்கினே?''

'மிரட்டி வாங்கிட்டேன்!''

- பர்வதவர்த்தினி, பம்மல்.



'ரெண்டு டாக்டருங்க சேர்ந்து அந்த ஆஸ்பத்திரியை நடத்துறாங்க!''

'அதுக்காக, ஆபரேஷனுக்கு பேஷண்ட் வந்தா, அதை யார் பண்றதுன்னு டாஸ் போட்டுப் பார்க்கிறது நல்லாயில்ல!''



'வாடகைப் பாக்கியைக் கேட்க வரும்போதெல்லாம் வீட்டுல யாருமே இருக்க மாட்டேங்கிறீங்க!''

'யாருமே இல்லாத வீட்டுக்கு நீங்க எதுக்கு சார் வாடகைக் கேட்கறீங்க?''



'கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்கு ஒரு கண்டம் இருக்குது, சார்?''

'கல்யாணமே ஒரு கண்டம்தானே... அதுதவிர இன்னொரு கண்டமா, ஜோஸியரே?!''



'இந்த மேஜர் ஆபரேஷன் பண்ணிக்கிட்டா ஒரு வருஷத்துக்குக் கவலையில்லை!''

'நிஜமாவா டாக்டர்?''

'ஆமாம்... அதுவரைக்கும் செலவுக்கு என் கையில பணம் இருக்கும்!''

-தீபிகா சாரதி, சென்னை -5.



'என்னப்பா! சட்னி சாம்பார்ல உப்பு, காரம் எதுவுமே இல்லை!''

'இன்னைக்கு ஒருநாள் வீட்டுச் சமையல்னு நினைச்சுக்கிட்டுச் சாப்பிடுங்க, சார்!''



'நீங்க டயட்ல இருக்காதீங்க!''

'ஏன், டாக்டர்?''

'டயட்ல, இல்லாமயிருக்கிறதைவிட அதிகமாகச் சாப்பிடுறீங்களாமே?''



'என் வீட்டுக்காரர் வித்தியாசமானவர்!''

'எப்படி?''

'அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டு 'அப்பா' வீட்டுக்குப் போயிடுவாரு!''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

'அவன் என்னையே சுத்தி சுத்தி வர்றாண்டி!''

'எதனால?''

'ஒருநாள் அவனைப் பார்த்து 'ஈ'ன்னு பல்லைக்காட்டிட்டேன்!''

-விமலா சடையப்பன், காளனம்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT