கிராமங்களுக்குச் சென்றால் அல்லது கோயில் குளங்கள் ஏரிகளை கண்டால் நாம் காண்பது பல வண்ண தாமரைகள் மற்றும் அல்லிகள் நிறைந்த குளம். இது நமக்கு சகஜமான ஒன்று.
ஆனால், அமெரிக்காவில் தாமரை மற்றும் அல்லி மலர்கள் மலர்வதை கண்டுகளிக்க ஏதுவாக.. நடைப்பயணமே உண்டு.
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் அனேகாஸ்டியா அவென்யூ பகுதியில் கெனில் ஏர்த் பார்க் மற்றும் நீரில் வாழும் தாவரங்கள் என்ற பெயரில் ஒரு தேசிய பூங்கா இருக்கிறது.
இங்குள்ள சுத்தமான கலங்காத குட்டைகள்.. சதுப்பு நிலங்களை காண்பதற்காகவே, மக்கள் கூட்டம் வருகிறது.
தாமரைகள் மே மாத ஆரம்பத்திலிருந்து செப்டம்பர் மத்தி வரை பூத்துக் குலுங்குகின்றன. இதில் இளம் சிவப்பு வண்ண தாமரைகள் மலர்ந்து ஜெலிப்பதை காண்பதே தனி அழகு.
இதேபோன்று ஆகஸ்டு மாதம் ஆரம்பித்து அக்டோபர் வரை அல்லிகள் பூத்து குலுங்கும்.
1938 - ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த பூங்கா, உலகின் ஒரே நீர்வாழ் தாவரங்களுக்கான பூங்காவாகும்.
வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இதற்கு விடுமுறை.