தினமணி கொண்டாட்டம்

நாமக்கல் கவிஞர் வரைந்த ஓவியம்

சந்திரசேகர்

நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஒரு கவிஞர் மட்டுமல்ல சிறந்த ஓவியரும் கூட. இவரது ஆசான் லட்சுமண ஐயர் மறைந்த பின் அவரது உருவத்தை ஓவியமாகத் தீட்டினார் ராமலிங்கம் பிள்ளை. அந்த ஓவியம் நாமக்கல் நகர மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

ஒரு முறை நாமக்கல்லுக்கு வந்த சிம்சன் என்ற ஆங்கிலேயர் அந்த ஓவியத்தைப் பார்த்து வியந்தார். புகைப்படத்தைப் போன்று இருந்த அந்த ஓவியத்தைத் தீட்டியவர் குறித்து விசாரித்து ராமலிங்கம் பிள்ளையை சந்தித்தார் சிம்சன்.

"இறந்து போன தன் ஒரே குழந்தையின் படத்தைக் கவிஞரிடம் தந்து அதை ஓவியமாகத் தீட்டித்தர வேண்டும் என்றும் அதற்கு ஐம்பது ரூபாய் சன்மானம் தருவதாகவும் ஓவியம் தனக்குப் பிடித்தால் மேற்கொண்டு பணம் அதிகமாகத் தருவதாகவும்' கூறினார்.

அதை ஏற்றுக்கொண்ட கவிஞர் குழந்தையின் ஓவியத்தை வரைந்து சிம்சனிடம் தந்தார். அப்படத்தை வாங்கி ஒரு மேஜை மேல் வைத்து சற்று விலகி நின்ற பல கோணங்களில் அந்த ஓவியத்தைப் பார்த்தார் சிம்சன்.

நெடுநேரம் இப்படிப் பார்த்து "ஓவியரே நீர் வெற்றி பெற்று விட்டீர். என் குழந்தையின் படம் உயிர்துடிப்போடு இருக்கிறது. இதை என் மனைவி பார்த்தால் அழுதுவிடுவாள்' என்று கவிஞரைப் பாராட்டி பர்சில் இருந்து ஒரு கட்டு நோட்டை உருவி அதைக் கவிஞரிடம் கொடுத்தார்.

நோட்டுக்களை எண்ணிப் பார்த்த கவிஞர் 675 ரூபாய் இருப்பதைப் பார்த்து வியந்து இவ்வளவு அதிகமாகக் கொடுத்திருக்கிறாரே என சந்தேகித்து அந்த நோட்டுக்களை அப்படியே மேஜை மேல் வைத்தார்.

"ஏன் வேண்டாமா?' என்று கேட்டார் சிம்சன்.

"இல்லை. மிகவும் அதிகமாக இருக்கிறது' என்றார் கவிஞர்.

சிம்சன் நோட்டுக்களை எண்ணிப் பார்த்து "ஒரு நண்பருக்கு கொடுக்க வைத்து இருந்த 500 ரூபாய் தாள் கூடுதலாக சேர்ந்துவிட்டது புரிந்தது. எனினும் அதற்காக அவர் தயங்காமல் உங்களுக்கு 175 ரூபாய் கொடுக்க நினைத்தேன். ஆனால் வேறொருவருடையப் பணமும் அதில் சேர்ந்துவிட்டது. இது தெய்வசித்தம். உங்கள் அற்புத ஓவியத்துக்கு இது தகும். இந்தப் பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்' என்றார் சிம்சன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT