தினமணி கொண்டாட்டம்

மிஸ்டர் இந்தியா டூ சினிமா 

DIN


உலக அழகி முதல் உள்ளூர் அழகிகள் வரை எல்லோரின் கனவு சினிமாதான். அது போல் இப்போது ஆண்கள் பிரிவில் மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்ற கோபிநாத் ரவி சினிமாவுக்கு வருகிறார். தேசிய அளவிலான ரூபரு மிஸ்டர்.இந்தியா பட்டத்திற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 34 இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். அதில் கோபிநாத்ரவி மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றதோடு, "பீப்பிள்ஸ் சாய்ஸ்', விருதையும் வென்றார். இதுவரை தென்னிந்தியாவில் யாரும் வெல்ல முடியாத இந்த பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்  கோபிநாத் ரவி.

""கல்லூரி காலத்திலேயே எனக்கு மாடலிங் துறை மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இருப்பினும், படிப்பிலும் கவனம் செலுத்திக் கொண்டு மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்தேன். அதனால், அது தொடர்பான விஷயங்களை அறிந்துக் கொள்வதோடு, அதற்காக என்னை தயார்ப்படுத்தியும் வந்தேன். அது இன்றைக்கு பெரும் வெற்றியைத் தந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் "மாஸ்டர்ஸ் ஆஃப் மிஸ்டர்ஸ்' என்ற தலைப்பில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வெல்ல வேண்டும், என்பது எனது அடுத்த லட்சியம்.  பிரபுதேவாவின்  "பகிரா' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். மேலும் 3 பட வாய்ப்புகள் வந்துள்ளன.  பிக் பாஸ் நிகழ்ச்சி, வெப் சீரிஸ் என அடுத்தடுத்த பேச்சுவார்த்தை நடக்கிறது. அது பற்றி விரைவில் அதிகராப்பூர்வமாக அறிவிப்பேன்'' என்றார் கோபிநாத் ரவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: வாராணசியில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி

அக்னிவீா் வாயு தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

செவிலியா் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு

லோகோ ரன்னிங் பிரிவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT