தினமணி கொண்டாட்டம்

இனி இணையத்திலேயே புது கார் வாங்கலாம்

DIN


"இ. காமர்ஸ்' என்ற இணைய வணிகம் அபார வளர்ச்சி கண்டுள்ளது. வெண்டைக்காய் முதல் வீட்டு உபயோகச் சாதனங்கள் வரை எல்லாவற்றையுமே வீட்டில் இருந்தபடியே பதிவு செய்து பெறலாம். ஆட்டோமொபைல் துறையில் பழைய கார்களை மட்டுமே இணையத்தில் வாங்க முடியும் என்ற நிலைமை மாறி, புத்தம் புதிய கார்களையும் வாங்கும் வசதி வந்துவிட்டது. "தன் கார்பால்' என்ற நிறுவனத்தின் மூலமாக இதனை சாத்தியமாக்கி இருக்கிறார் விக்னேஷ் ராமகிருஷ்ணன்.

அவருடன் ஒரு சந்திப்பு:

இணைய வர்த்தகத்தில் புதிய கார்களை விற்கும் எண்ணம் எப்படி வந்தது?

கரோனா காலத்துக்குப் பின்னர், ஆட்டோமொபைல் துறை மீண்டும் வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக இரண்டு லட்சம் கார்கள் விற்பனையாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எல்லா ஊர்களிலும், எல்லா தயாரிப்பு கார்களையும் விற்பனை செய்யும் டீலர்கள் இல்லை. இந்த இடைவெளியைப் போக்க யோசித்தபோது, இணையத்தில் கார் விற்பனை செய்யும் எண்ணம் வந்தது. அதன்படி ஆரம்பித்ததுதான் www.trycarpal.com என்ற இணையதளங்கள்.

இணையத்தில் எவ்வாறு சாத்தியமாகிறது?

சிறு நகரங்களில் ஏதாவது ஒன்றிரண்டு கார் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையாளர்கள் மட்டுமே உள்ளனர். அவை அல்லாமல் வேறு நிறுவனங்களின் கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் விருப்பம் நிறைவேறுவதில் சிரமங்கள் இருக்கின்றன. சில ஊர்களில், சில வகையான கார்களுக்கு கார்களை பதிவு செய்துவிட்டு, பல மாதங்கள் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. கார் ஷோரூம்களுக்கு சென்றால், ஒரு குறிப்பிட்ட கார் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் பல வகையான மாடல்களை மட்டுமே பார்க்க முடியும். அவர்கள் உங்களை தங்களுடைய காரை வாங்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அவற்றின் சிறப்புகளை மட்டுமே எடுத்துச் சொல்வார்கள். எனவே, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஷோரூமாக ஏறி இறங்கி பல்வேறு கார்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். எங்கள் இணையதளம் மூலமாக எல்லா வகையான கார்களையும் பற்றிய முழு தகவல்களைத் தெரிந்துகொண்டு, தங்கள் விருப்பத்துக்கேற்ற கார் மாடல்களை தேர்ந்தெடுத்து, ஆர்டர் செய்யலாம்.

நாங்கள் பல்வேறு ஊர்களிலும் இருக்கும் எல்லா வகையான கார் விற்பனையாளர்களும் அடங்கிய பெரிய குழுவை வைத்திருக்கிறோம். எனவே, காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லாமல், எந்தெந்த ஊரில் எந்த விற்பனையாளரிடம் அந்த மாடல் கார் உள்ளதோ, அவர்களிடமிருந்து உடனே காரை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்ய ஏற்பாடு செய்துவிடுவோம்.

வாடிக்கையாளர்களுக்கு வேறு என்ன வகையான உதவிகளைச் செய்கிறீர்கள்?

நாட்டில் குறைந்த விலை கார்கள் தொடங்கி சொகுசு கார்கள் வரை பலவிதமான கார்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப கார்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் அளிக்கிறோம். அவர்கள் ஒரே இடத்தில் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து தான் எந்த கார் வாங்குவது என்று முடிவு செய்ய முடியும். அதற்கான அனைத்து வகையான ஆலோசனைகளை வழங்குகிறோம்.

கார் வாங்குவதற்கு கடனுதவி தேவைப்பட்டால், அதற்கும் ஏற்பாடு செய்கிறோம். இணையதளத்தில் கார் வாங்க, பதிவு செய்த நாளிலிருந்து, கார் விநியோகிப்பது குறித்த அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் அறிய முடியும்.

சென்னை, திருச்சியில் உள்ள எங்களதுஅலுவலகங்களில் கார்களை டெலிவரி எடுத்துகொள்ளலாம். மற்றபடி கார் வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே விநியோகிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எந்நாளும் எப்பொழுதும் புடவைதான்...!

இந்தியா கூட்டணி பிரதமர் யார்? ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்!

வணங்கான் எப்போது?

ஐபிஎல் முடிந்தாலென்ன? நினைவுகள் இருக்கே!

206 பொதுக்கூட்டங்கள், 80 நேர்காணல்கள்! பஞ்சாபில் தேர்தல் பிரசாரத்தை முடித்தார் மோடி!

SCROLL FOR NEXT