தினமணி கொண்டாட்டம்

சென்னையைச் சுற்றிய தீவுகள்...!

செளமியா சுப்ரமணியன்

சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் பழவேற்காடு ஏரியின் நடுவே அமைந்துள்ள தீவை பழவேற்காடு ஏரியிலிருந்து போட்டிங் மூலம் அடையலாம். இந்தத் தீவு முக்கிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. இந்த அழகிய தீவு ஆங்கிலத்தில் ஹிடன் ஐலாண்ட், லேக் ஐலாண்ட் என்று அழைக்கப்படுகிறது. நண்பர்கள், குடும்பத்தினருடன் ஒரு நாள் பிக்னிக் செல்ல இது ஒரு அருமையான இடம்.

அடையாறு ஆற்றின் நடுவே அமைந்துள்ளது க்விபிள் தீவு. இந்தத் தீவுக்கு சாந்தோம் நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம். சால்ட் வாட்டர் லகூன்களில் உருவான நான்கு சிறிய தீவுகளில் இது மிகப் பெரியதாகும். பிரெஞ்சு தலைமையிலான இந்தியப் படைகளுக்கும் நவாப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற போருக்குப் பிறகு ஐரோப்பியர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு கல்லறை இத்தீவின் நடுவே கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து 70 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள பழங்கால கோட்டை கடற்கரையும் வங்காள விரிகுடாவும் ஒன்று சேரும் இடத்தில் சிறு சிறு தீவுகள் உருவாகியுள்ளன. ஆலம்பாறை தீவு 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டு, கோட்டை துறைமுகமாக செயல்பட்டது. இ.சி.ஆர். சாலையில் ஒன்றரை மணி நேரத்தில் ஆலம்பாறை கோட்டை உள்ள இடைக்கழிநாடை என்ற இடத்தை அடைந்து விடலாம்.

அடையாறு ஆற்றங்கரையில் உடைந்த பாலத்திக்கு அருகே அமைந்துள்ளது திமிங்கத் தீவு. இங்கு ஒரு போட்டிங் கிளப்பும் செயல்படுகிறது. ஆற்றில் நீர் மட்டம் நன்றாக இருக்கும்போதெல்லாம், போட்டிங் ஏற்பாடு செய்யப்படுகிறது. அடையாறு பாலத்துக்கு அப்பால் உள்ள ஆறு தெளிவாகத் தெரிவதுடன், பல புலம்பெயர் பறவைகளையும் நாம் இங்கே காணமுடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பான் - ஆதார் இணைக்கவில்லையா? வருமான வரித்துறை எச்சரிக்கை!

காஞ்சிபுரத்தில் சேவாபாரதி அமைப்பின் சாா்பில் உணவு, தங்குமிடத்துடன் இலவச சுயதொழில் பயிற்சி

கை நடுக்கமா? அசாம் முதல்வருக்கு நவீன் பட்நாயக் பதிலடி

'எனக்கு முன் மாதிரி மேஜர் ராதிகா சென்': ஐ.நா. பொதுச் செயலாளர் புகழாரம்!

அதிக நீரைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க நேரிடும்: அதிஷி

SCROLL FOR NEXT