இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

DIN

முக நூலிலிருந்து....
• ஒரு வாக்குவாதத்தில்
வெற்றி என்பது... 
அதைத் தவிர்த்துவிடுவதில்தான்
இருக்கிறது.
தாகீர் பாட்சா

• பேசக் கற்றுக் கொள்ள மனிதனுக்கு
இரண்டாண்டுகள் போதும்...
மெளனத்தைக் கற்றுக் கொள்ள
ஐம்பது ஆண்டுகள் வேண்டும்.
~ எர்னஸ்ட் ஹெமிங்வே 
மு.ரா. சுந்தர மூர்த்தி 

• சட்டென உதிர்கிற
பறவையின் இறகு...
சிறிது நேரம் 
பறவையெனப் பறக்கிறது!
வதிலை பிரபா

• தாலாட்டுக்கும் ஒப்பாரிக்கும்
இடையே...
ஊஞ்சல் ஆடுகிறது வாழ்க்கை.
ஆரூர் தமிழ்நாடன்

• "எங்க ஊர்ல மழை பெய்யுது'ன்னு
பதிவு போடலாம்ன்னு பார்த்தா...
"வாய்ப்பு இல்லை ராஜா'ன்னு
மேலே இருந்து சத்தம் கேக்குற மாதிரி இருக்கு!
வனம் கலைமணி

சுட்டுரையிலிருந்து...
• உதடுகளால் சொல்ல முடியாத பலதையும் 
சில சமயங்களில் உணர்வுகள் சொல்லி 
விடுகின்றன.
கண்ணீராக...
அல்லது
கவிதைகளாக.
தனிமை

• குளிச்சு கௌம்பு ண்ய்ற்ங்ழ்ஸ்ண்ங்ஜ் போலாம்னா, 
"விடு மச்சான் புது வருசம் பொறக்குட்டும்'ங்கறான். 
குளிக்கறதச் சொல்றானா ண்ய்ற்ங்ழ்ஸ்ண்ங்ஜ் வைச் சொல்றானா? 
கடோத்கஜன்

• திருத்த முடியாத ஜென்மம் எல்லாம் 
பிழைக்க தெரியாதது அல்ல... 
பிழையற்றதாகக் கூட இருக்கலாம்.
அழகிய கவிதை 

• தூரப் பறக்கிறேன்
தொலைந்தவர்களை தேடி...
கூடு திரும்ப மனமின்றி 
ஒற்றைப் பறவையாய்
சதீஷ்

• வாழ்க்கை என்ற துலாபாரத்தில் 
காகிதங்கள் (பணம்) தான் 
மனிதனை எடைபோடுகிறது, 
பாமரனா? பணக்காரனா ? என்று. 
செல்லக்குழந்தை 

வலைதளத்திலிருந்து...
கிரஹாம்பெல் தொலைபேசி என்ற கருவியைக் கண்டுபிடித்த 5 ஆண்டுகளிலேயே மெட்ராசில் தொலைபேசிகள் சிணுங்கத் தொடங்கிவிட்டன. 
19-11-1881 அன்று பாரிமுனையில் உள்ள எர்ரபாலு செட்டித் தெருவில் 37ஆம் நம்பர் கட்டடத்தில் இந்தியாவின் முதல் தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்டது.
புதிதாகத் தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்ட சமயத்தில், சுமார் 4 லட்சம் மக்கள் வசித்த மெட்ராசில், வெறும் 17 பேர் மட்டுமே தொலைபேசியைப் பயன்படுத்தினர். அந்த ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 24ஆக உயர்ந்தது. அந்தக் கால வர்த்தகர்கள் இடையே தொலைபேசிக்கு பெரிய வரவேற்பு எதுவும் இல்லை.
சாதாரண மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்... எனவே தொலைபேசி நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக விளம்பரங்களை வெளியிட்டது. ஆனால் அதுவும் பெரிதாக எடுபடவில்லை. 1910 -ஆம் ஆண்டு கூட வெறும் 350 பேரிடம் மட்டுமே தொலைபேசி இருந்தது. அதிலேயே நிறைய கிராஸ் டாக், ஒருவரைத் தொடர்பு கொள்ள முயன்றால் வேறு ஒருவருக்கு அழைப்புச் செல்வது போன்ற பிரச்னைகள் இருந்தன. 
அப்போதெல்லாம் தொலைபேசி ஒயர்கள் தலைக்கு மேலாகத்தான் சென்று கொண்டிருந்தன. கோயில் தேர் திருவிழாக்கள், சுழன்றடிக்கும் காற்று என பல காரணங்களால் இந்த ஒயர்கள் ஆங்காங்கே அறுந்து தொங்கின. இந்த பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பூமிக்கு அடியில் கேபிள் பதிப்பது என மெட்ராஸ் டெலிபோன்ஸ் முடிவெடுத்தது. 1927-28 காலகட்டத்தில் இந்த பணி மும்முரமாக நடைபெற்று கிண்டி வரை கேபிள்கள் பதிக்கப்பட்டன. 
இப்படித் தான் மெட்ராஸ் மாநகரில் தொலைபேசிகள் அறிமுகமாகி, இன்று அனைவரின் கைகளிலும் செல்போன்களாக சிணுங்கிக் கொண்டிருக்கின்றன. 
http://niyabagamvaruthe.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி: ஐ.சி.யூ.வான அரசுப் பேருந்து!

காங்கிரஸ் பெயரை 232 முறை, தனது பெயரை 758 முறை சொன்ன மோடி!

அஸ்ஸாமின் முதல் ஏ.ஐ. ஆசிரியர் 'ஐரிஸ்'!

டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்!

வி.கே. பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது: நவீன் பட்நாயக்

SCROLL FOR NEXT