இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 329

ஆர்.அபி​லாஷ்

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மனிதவளத்துறை அமைச்சரும் அவருடைய மகனுமாக நாற்பது போராட்டக்காரர்கள் மீது தேர்களை ஏற்றிக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுகிறது. அவரை விசாரிக்கும் மன்னர் வீரபரகேசரி அவருக்கு தண்டனை வழங்க முடிவெடுக்கிறார். அப்போது அமைச்சர் மகனிடம் பேசும் போது, உன்னுடைய claim- ஐ நான் ஏற்க முடியாது என்று மன்னர் வீரபரகேசரி கூறுகிறார். இதன் பொருள் என்ன என்று கணேஷ் கேட்கிறான். இந்த எளிய சொல்லுக்கு நமது அன்றாட மொழியில் உள்ள முக்கியத்துவத்தைப் பார்ப்போமா!

கணேஷ்: சார், claim என்றால் கோரல் என்று சொல்றீங்க? அப்படீன்னா கோரைப்பாய் போல ஏதாவதா? 
புரொபஸர்: இந்த தலைமுறைக்கு ஆங்கிலமும் தெரியல, தமிழும் தெரியல. 
கணேஷ்: நாங்க அவசியமில்லாததை தெரிஞ்சுக்கிறதில்ல. அதனால தான். 
புரொபஸர்: அப்புறம் ஏன் கேட்குறே? 
ஜூலி: For the heck of it. What else?

கணேஷ்: அதென்ன ஹெக்? 
ஜூலி: Heck என்றால் ஒரு exclamation. Exclamation என்றால் என்னவெனத் தெரியும் தானே? இல்லேன்னு மட்டும் சொன்னே மூக்கிலேயே கடிச்சிருவேன். 
கணேஷ்: ஓ... அது எனக்குத் தெரியுமே. வியப்பொலி. ஆஹா, ஓஹோ இவையெல்லாம் வியப்பொலிகள். 
ஜூலி: கரெக்ட். 
கணேஷ்: அப்பாடா என் மூக்கு தப்பிச்சுது. சரி, ஆனால் இந்த heck என்பது வெறுமனே வியப்பொலி என்றால் அது நீ பயன்படுத்துற வாக்கியத்தில் வர முடியாதே?
ஜூலி: பார்ரா ரொம்ப புத்திசாலி ஆகிட்டே. ஏன் நான் பயன்படுத்துற மாதிரி வாக்கியத்தின் நடுவே வர முடியாது? 
கணேஷ்: ஆஹ் ஓஹ் மாதிரியான வியப்பொலிகள் வெறுமனே ஒலிக்குறிப்புகள் மட்டும் தான், அவை முழுமையான சொற்கள் அல்ல. அவற்றை வைத்து ஒரு வாக்கியத்தை அர்த்தபூர்வமாக உருவாக்க முடியாது. 
ஜூலி வாலாட்டுகிறது: சூப்பர் சூப்பர். நீ சொன்னது தான் விசயம் - இந்த heckக்கு வேறொரு பொருளும் உள்ளது. கேள்விகள், திகைப்புணர்ச்சி ஆகியவற்றை ஒரு வாக்கியத்தில் அழுத்தமாக உணர்த்துவதற்காக heckஐ பயன்படுத்துவார்கள். What the heck has just happened? What the heck is the matter with you?இப்படி வாக்கியங்களில் இச்சொல் வரும். 
கணேஷ்: என்னுடைய காதலி அடிக்கடி இதைச் சொல்லுவாள். எதையாவது சாப்பிடும் போது அவளே கவனமில்லாமல் தன் மீது சிந்தி விடுவாள். உடனே what the heck என்று சொல்லுவாள். அவள் ஸ்கூட்டரில் போகும் போது யார் மீதாவது கொண்டு போய் மோதி விட்டு what the heck என்று சொல்லுவாள். அவள் அடுத்தவரைத் திட்டுகிறாளா அல்லது தன்னையே திட்டிக்கிறாளா என்பதே புரியாது.  
ஜூலி: ‘What the heck’ is used to indicate that you do not care about a bad aspect of an action or situation.  அதாவது ஒரு செயலுக்கு மோசமான விளைவுகள் இருக்குமில்லையா? அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்று உணர்த்துவதற்காக heckஐ பயன்படுத்துகிறார்கள். 
கணேஷ்: எனக்குப் புரியல. தெளிவா ஒரு உதாரணத்தோட சொல்லித் தந்தா எனக்குப் புரியும். 
ஜூலி: கிளெய்மை விளக்க ஆரம்பிச்சு இப்போ எங்கே வந்திட்டோம் பாரு. நான் இதை விளக்கணுமுன்னா ஒரு நிபந்தனை. 
கணேஷ்: என்ன? 
ஜூலி: நீ அடிக்கடி காதலி காதலின்னு சொல்றியே அவளோட புகைப்படத்தை எனக்குக் காட்டணும். ஓக்கேவா? 
கணேஷ்: ம்ம்ம்... ஓக்கே....

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகம்: அமித் ஷா பிரசாரம்

அமலாக்கத்துறை, சிபிஐ காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டவை: மத்திய சட்ட அமைச்சா் விளக்கம்

பறவைக் காய்ச்சல்: தமிழக - கேரள எல்லைகளில் மருத்துவக் கண்காணிப்பு

நீண்டகால பெண் எம்.பி.

பள்ளிவாசல் நிா்வாகிகள் தோ்தலில் முறைகேடு: நடவடிக்கை கோரி மறியல்

SCROLL FOR NEXT