மகளிர்மணி

மின்​வி​ளக்கு, போக்​கு​வ​ரத்து வச​தி​யில்​லாத கிரா​மத்​தி​லி​ருந்து   ஓர் ஐஏ​எஸ்...!

கண்ணம்மா பாரதி

உத்​த​ர​கண்ட் மாநி​லத்​தின் ராம்​பூர் கிரா​மத்​தில் வீடு​க​ளுக்கு மின்​சார வசதி இல்லை. இரவு நேரங்​க​ளில் வீடு​க​ளில் மண்​ணெண்​ணெய் விளக்​கு​தான் கண்​சி​மிட்​டும். போக்​கு​வ​ரத்து சாலை வச​தி​கள் ஒன்​றும் இல்​லாத ஊர். அவ​ச​ரத்​திற்கு ஆம்​பு​லன்ஸ் கூட கிரா​மத்​திற்கு வர முடி​யாது.

பிரி​யங்கா காலை​யில் பள்ளி சென்று வீடு திரும்​பி​ய​தும் , புத்​த​கப் பையை வீட்டில் வைத்​து​விட்டு வய​லில் வேலை பார்க்​கும் அப்​பா​வுக்கு உத​வி​யாக வேலை செய்ய போய்​வி​டு​வார். பத்து வரை பிரி​யங்கா படித்​தது மண்​ணெண்​ணெய் விளக்​கின் வெளிச்​சத்​தில். நல்ல மதிப்​பெண்​கள் வாங்​கி​ய​தால் "பிரி​யங்​காவை மேலே படிக்க வை' என்று ஆசி​ரி​யர்​கள் நிர்​பந்​தம் செய்​த​தால் உயர்​நி​லைப் படிப்​பிற்​காக பக்​கத்​துப் பெரிய ஊரான கோபேஸ்​வ​ருக்​குச் சென்​ற​தும் தனது படிப்​புச் செல​வுக்​காக மாலை வேளை​க​ளில் குழந்​தை​க​ளுக்கு பிரி​யங்கா பாடம் சொல்​லிக் கொடுக்க ஆரம்​பித்​தார்.

""கோபேஸ்​வ​ருக்​குச் சென்ற பிற​கு​தான் மின் விளக்​கின் வெளிச்​சத்​தில் பாட நூல்​களை படிக்​கும் வாய்ப்பு கிடைத்​தது. அங்கே பி ஏ வரை படித்​தேன். அதி​லும் நல்ல மதிப்​பெண்​கள் பெற்​ற​தால் டெஹ்​ரா​டூ​னுக்​குச் சென்​றேன். அங்கே சட்டக் கல்​லூ​ரி​யில் சேர்ந்​தேன். சட்டப்​ப​டிப்பை முடித்து சொந்த ஊர் திரும்​பி​ய​தும் மாண​வி​க​ளுக்கு டியூ​ஷன் சொல்​லிக் கொடுத்​தேன். அப்​பா​வுக்கு உத​வி​யாக வய​லி​லும் வேலை பார்ப்​பேன். வீடும் களி​மண்​ணால் கட்டப்​பட்ட வீடு​தான். வீட்டில் ஏழு பேர் வசிக்​கி​றோம். எனக்கு 28 வய​தா​கி​றது. ஐஏ​எஸ் தேர்​வில் முதல் முயற்​சி​யில் தேர்வு பெற்​றுள்​ளேன். எனக்கு ஐஏ​எஸ் தரப்​பட்​டி​ய​லில் 257 -ஆவது இடம் கிடைத்​துள்​ளது.

கிரா​மத்​தின் வச​திக் குறை​வு​தான் எனக்கு பல​மாக உர​மாக அமைந்​தது. போக்​கு​வ​ரத்து வசதி இல்​லா​மல் எனது கிராம மக்​கள் கஷ்​டப்​ப​டு​கி​றார்​கள். பஸ் பிடிக்க கால்​ ந​டை​யாக பல கி.மீ. நடக்க வேண்​டும். மருத்​துவ வசதி இல்​லா​மல்... ஆம்​பு​லன்ஸ் கிடைக்​கா​மல் பலர் கிரா​மத்​தில் இறந்​துள்​ள​னர். நோயா​ளி​யைப் பல கி.மீ. தூரம் தூக்​கிச் செல்​லும் போதே இறந்து விடு​வார்​கள். இவற்றை நேரில் பல முறை பார்த்​தி​ருக்​கி​றேன். அழு​தி​ருக்​கி​றேன். சில சிக்​க​லான, துய​ர​மான தரு​ணங்​க​ளில் தோல்​வியை ஒப்​புக் கொண்டு அப்​ப​டியே விட்டு​ வி​டு​வோமா என்று தோன்​றும். என்​றா​லும் வென்றே தீர வேண்​டும் என்று மனம் சோகம், விரக்​தி​யின் பக்​கம் போவ​தில் இருந்து மீட்பேன். தலை​வி​தியை மாற்ற, ஐஏ​எஸ் தேர்​வுக்​குத் தயா​ரா​னேன். இப்​போது ஐஏ​எஸ் தேர்வு பெற்​றி​ருப்​ப​தால் எனது கிராம மக்​க​ளுக்கு எல்லா வச​தி​க​ளும் கிடைக்க என்​னால் ஆன நட​வ​டிக்​கை​களை எடுப்​பேன்.. உத​வு​வேன்'' என்​கி​றார் பிரி​யங்கா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT