மகளிர்மணி

அவல் கேசரி

சொக்கம்பட்டி வி.குமாரமுருகன்

தேவையான பொருள்கள்:

அவல்- கால் கிலோ
சர்க்கரை- 400 கிராம்
நெய்-50 கிராம்
முந்திரி பருப்பு-10
உலர் திராட்சை-3 தேக்கரண்டி
கேசரி பவுடர்- 2 சிட்டிகை
ஏலக்காய்த் தூள்- அரை தேக்கரண்டி
குங்குமப்பூ- சிறிதளவு

செய்முறை: 

முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக எடுத்து, உலர் திராட்சையுடன் சிறிது நெய்யில் வறுத்து எடுக்கவும். அவலை வெறும் வாணலியில் இட்டு லேசாக வறுத்து, அடிகனமுள்ள ஒரு பாத்திரத்தில் அவலை இட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பாதி பதமானதும் சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தொடர்ந்து வேகவிடவும். இடைஇடையே நெய்யைவிட்டு அடி பிடிக்காமல் கிளறி கொடுக்கவும். கலவை உதிரியாக கேசரி பதத்தில் வெந்ததும், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, குங்குமப்பூ சேர்த்து இறக்கவும். ஒரு தட்டில் பரவலாக வைத்து ஆறினதும் விரும்பும் அளவில் துண்டுகளாக இடவும். அருமையான ருசியில் அவல் கேசரி தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ பவானி அம்மன் கோயில் பௌா்ணமி விழா

இந்த நாள் இனிய நாள்!

இன்று யோகம் யாருக்கு?

விவசாயிகளுக்கு தரமான விதைகள் விநியோகம்: ஆட்சியா் அறிவுரை

புத்தரின் 2,568-ஆவது பிறந்த நாள்

SCROLL FOR NEXT