மகளிர்மணி

இந்திய இளவரசிக்கு நீல வில்லை விருது

முனைவர் சே. கரும்பாயிரம்

சீக்கிய பேரரசின் கடைசி மன்னரான துலீப் சிங்கின் மகள் மறைந்த சோபியாவுக்கு நீல வில்லை விருது வழங்கி, கௌரவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள ஆங்கில பாரம்பரியமிக்க தொண்டு நிறுவனம்  ஒன்று பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட நபர்களுடன் தொடர்புடைய அவர்களின் குடியிருப்புக் கட்டடங்களின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கௌரவிக்கும் வகையில்,  இந்த விருதை வழங்குகிறது.

இதன்படி, இந்த ஆண்டுக்கான விருது பிரிட்டன்வாழ் இந்திய இளவரசி சோபியா துலீப் சிங்கின் லண்டன் இல்லத்துக்கு அறிவித்து, கௌரவித்துள்ளது.

கடந்த 1900-ஆம் ஆண்டு முதல் பிரிட்டனில் பெண்கள் வாக்களிக்கும் உரிமைக்காகப் போராடியவர் இவர்.  

பஞ்சாப் மன்னர் துலீப் சிங் தனது 15-ஆவது வயதில் ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப்பட்டார். அவர் மூலமாக உலகப் புகழ்ப் பெற்ற கோகினூர் வைரம் பிரிட்டன் அரசி வசம் ஒப்படைக்கப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் தோ்தல் கண்காணிப்பு குறித்து துறை அலுவலா்களுடன் ஆய்வு

மோடி வென்றால் ஜனநாயகத்துக்கு ஆபத்து: முத்தரசன் குற்றச்சாட்டு

‘இந்தியா’ கூட்டணி வென்றால் மகத்தான திட்டங்கள் கிடைக்கும்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

‘வாக்காளா் அட்டை இல்லாதவா்கள் 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்’

தொழிலதிபரிடம் நூதன முறையில் ரூ.1.53 கோடி மோசடி

SCROLL FOR NEXT