சம்பா வடை
அரிசியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி -200 கிராம்
உளுந்தம் பருப்பு -100 கிராம்
Advertisement
Advertisement
மிளகாய் வத்தல் -6
தேங்காய் -அரை மூடி
உளுந்தம் பருப்பு -2 தேக்கரண்டி
பெருங்காயம், கடலைப்பருப்பு -தலா ஒரு தேக்கரண்டி
எண்ணெய், உப்பு-தேவையான அளவு
இஞ்சி-ஒரு சிறிய துண்டு.
செய்முறை:
அரிசியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு நன்றாகக் களைந்து அதில் மிளகாய் வத்தல், பெருங்காயம், சீரகம், சிறிதளவு கறிவேப்பிலையைப் போட்டு கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். உளுந்தம் பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, கெட்டியாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் அரைத்து வைத்த அரிசி மாவுடன் இதைக் கலந்து ஊற வைத்த கடலைப் பருப்பையும், சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய், நறுக்கிய இஞ்சி சேர்த்து கலந்து ஒரு கரண்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து இதில் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விட வேண்டும்.
மாவை கெட்டியாகப் பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் சிறு உருண்டைகளாக உருட்டி கையில் வடைகளாக தட்டி அதில் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும்.