முகப்பு
மகளிர்மணி

கோடையைச் சமாளிக்க...

பிஞ்சுப் புடலங்காய், பூசணி, சௌசௌ, பரங்கிக்காய் என்று நார்ச்சத்துள்ள காய்கறிகளை கூட்டாக சமைத்துச் சாப்பிட வேண்டும்.

Updated On : 24 மே 2026, 4:00 am IST
பகிர்:

பிஞ்சுப் புடலங்காய், பூசணி, சௌசௌ, பரங்கிக்காய் என்று நார்ச்சத்துள்ள காய்கறிகளை கூட்டாக சமைத்துச் சாப்பிட வேண்டும்.

காரக்குழம்பு, புளிக்குழம்புகளைத் தவிர்த்து பருப்பு வகைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உஷ்ண கட்டியிலிருந்து காப்பாற்றும்.

பிரிட்ஜில் தினமும் தர்பூசணி, கிர்ணிப்பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை சேர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்துக்கொண்டு தேவையானபோது எடுத்துச் சாப்பிடலாம்.

Advertisement

Advertisement

 எலுமிச்சம், ஆரஞ்சு, தக்காளி, திராட்சை போன்ற பழ வகைகளை சாறாகப் பிழிந்து கோடையில் அருந்தும் பொழுது வெயிலுக்குக் குளுமையாக இருக்கும்.

சப்பாத்தி, பரோட்டா போன்ற டிபன்களை தவிர்த்து இட்லி, தோசை, உப்புமா, இடியாப்பம் போன்ற டிபன்களை செய்து சாப்பிடலாம்.

ஆர்.ஜெ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.