சிறுவர்மணி

கடி

DIN

""ஹலோ!.... நான் விக்கி பேசறேன்!....''
""நேரமானால் பரவாயில்லே!.....விக்காதே!.... தண்ணி குடிச்சுட்டே பேசு!''

அமுதா அசோக்ராஜா, அசூர் - 620015.

""இவ்ளோ பெரிய பையனா இருந்துக்கிட்டு ஊசிக்கு இப்படி அழறாங்கறயே...''
""ஊசிக்கு பயப்படமாட்டான்!.... 2, 3, டெஸ்ட் எடுத்து பார்த்துடலாம்னு டாக்டர் 
சொன்னதுக்குத்தான் அழறான். "டெஸ்ட்' டுன்னாலே அவன் ரொம்ப பயப்படுவான்!''

வி.ரேவதி, தஞ்சாவூர்.


""ஸ்வீட்டை வாங்கிக்கோன்னு எத்தனை தடவை சொல்றேன்.... 
காதிலேயே வாங்கிக்க மாட்டியா?''
""காதிலே எப்படி வாங்க முடியும்?.... 
கையிலேதானே வாங்க முடியும்?''

நா.வினோத் குமார், அரக்கோணம் - 632510.

""அவரு போலி டாக்டர் போலிருக்கு!''
""எப்படிச் சொல்றே?""
""எங்க தாத்தா, தூக்கமே வரலேன்னு 
சொன்னதுக்கு, 1 மணி நேரத்திற்கு ஒரு தடவை சாப்பிடறாமாதிரி மாத்திரை தர்றார்!''

உ.உமர் ஃபாரூக், கடையநல்லூர்.


""என்னைப் போட்டு எல்லோரும் குழப்பறாங்கடா!''
""நீ குட்டையா இருக்கறாதாலேதான் !
குட்டையைக் குழப்பறாங்க.... என்னை மாதிரி உயரமா வளர்ந்துட்டா யாரும் குழப்பமாட்டாங்க!''

வி.ரேவதி, தஞ்சாவூர்

""இந்தியாவிலேயே கோதுமை, அரிசி எங்கே விளையுதுடா?''
""இரண்டுமே மண்ணுலேதான் சார் விளையுது!''

அ.காயத்ரிதேவி, சென்னை - 600019.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: துரை வைகோ

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

இன்றைய ராசி பலன்கள்!

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT