சிறுவர்மணி

அமைதி!

DIN

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை "அமைதி என்றால் என்ன..? என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும்...'' என்று அறிவித்தான்.
 இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு கொண்டு வந்தார்கள்.
 மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒவ்வொரு மாதிரி பிரதிபலித்திருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.
 மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக வரையப்பட்டு இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்குத் தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.
 ஓர் ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது! இரவு நேரம்.... அது மட்டுமில்லாமல் இடியுடன் கூடிய மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது! இது அமைதியே அல்ல!.... சற்று உற்றுப் பார்த்தார் மன்னர். நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில், கூடு கட்டியிருந்த பறவை ஒன்று, கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.
 "இந்த ஓவியத்தை வரைந்தது யார்?....''
 ஓவியரை மன்னரிடம் அழைத்து வந்தனர். "இந்த ஓவியம் தத்ரூபமாக, பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை, கீழே உள்ள மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை.. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது..?''
 "மன்னா..! சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத, மனதுக்கு இனிமையான, ரம்மியமான இடத்தில் அமைதி யாக இருப்பது பெரிய காரியம் அல்ல....
 நடுங்கக் கூடிய இடியின் முழக்கத்திலும், இரவில் பயமுறுத்தும் மின்னல் ஒளியிலும், பேரிரைச்சலோடு கீழிறங்கும் அருவியின் ஓசையிலும், பலத்த மழையிலும், ஆகிய இவையெல்லாம் இருக்கும் இடத்தின் நடுவில் இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல்.. எதுவும் தன்னை பாதிக்க விடாமல்.. தன் அரவணைப்பில் தன் குஞ்சுகளை தைரியமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டு இருக்கிறதே அந்தப் பறவை! பதற்றமின்றி உள்ளுக்குள் அமைதியாக இருக்கும் அந்தப் பறவையின் அமைதியே உண்மையான அமைதி..! குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது...!''
 "சபாஷ்..! அமைதிக்கு மிக அற்புதமான விளக்கம்!.....'' கை தட்டி பாராட்டிய மன்னன், அந்த ஓவியத்தை வரைந்த ஓவியனுக்கே முதல் பரிசு கொடுத்தான்.
 தொல்லைகளும், துன்பங்களும், பிரச்னைகளும் சூழ்ந்து இருக்கும் தருணத்தில் அவைகளைக் கண்டு பதற்றமடையாமல் எதிர்கொள்வதே உண்மையான அமைதி.
 ஜோ.ஜெயக்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா வெல்லும்' - ராகுல் எக்ஸ் பதிவு!

நூலாற்றின் கரையை மேம்படுத்தும் பணி தொடக்கம்

நாளைய மின் தடை

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி!

வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: வாராணசியில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி

SCROLL FOR NEXT