சிறுவர்மணி

கடி

DIN

• "எங்க டீச்சர் எப்பவும் ரெண்டு அடிதான் குடுப்பாங்க..... இன்னிக்கு மூணு அடி கொடுத்திட்டாங்க...''
"ஏண்டா?''
"இன்னிக்கு அரை அடி ஸ்கேல் 
வச்சிருந்தாங்க....''
ஆர்.சுப்பு, திருத்தங்கல்.

• "தென்னை மரத்தைப் பற்றி முழுப்பக்கத்துக்கு எழுதச் சொன்னா, கால் 
பக்கத்துக்கு எழுதியிருக்கியே?...''
"அது குட்டைவகைத் தென்னை மரம்சார்!''
அனன்யா, 49-டி, டாக்டர் அன்சாரி வீதி, பொள்ளாச்சி - 642001.

• "நீ எந்த சப்ஜெக்டுலே வீக்?''
"மார்க் வாங்காத சப்ஜெக்டுலேதான்!''
என்.பர்வதவர்த்தினி, சென்னை - 600075.

• "ரெண்டு ஆரஞ்சு எவ்வளவு?''
"அறுபது ரூபா!''
"அடேங்கப்பா!.... அவ்வளவு விலையாடா!''
"ஒரு 6ல5 முப்பதுன்னா, ரெண்டு 6ல5 அறுபது ரூபாதானே!''
குமாரி, கே.விஜயலட்சுமி, 
திருப்பத்தூர் - 635601

• "எதுக்குடா பன்னை "ஹூக்கும்' 
முக்கிக்கிட்டே சாப்பிடறே?''
"நீதானே பன்னோட பாலைக் குடுத்துட்டு முக்கி சாப்பிடச் சொன்னே!''
ஜி.சுந்தரராஜன், 479, வடக்கு ரத வீதி, 
திருத்தங்கல் - 626130.

• "அவசர உதவிக்கு "100' போன் 
பண்ணினா போதுமா?''
"ஒரு போன் பண்ணினாலே போதுமே!''
அனன்யா, பொள்ளாச்சி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹேப்பி ஓணம்... மாளவிகா மோகனன்!

சொத்துக்காக மைத்துனரைக் கொன்றவர் கைது!

ஓணம் ஸ்பெஷல்... பாவனா!

உத்தரகண்ட் நிலச்சரிவு: சிதம்பரம் யாத்திரிகர்களை மீட்க நடவடிக்கை -தமிழக முதல்வர்

விஜய் மாநாடு நடத்தக் கூடாது என்பதற்காகவே நிபந்தனைகள் விதிப்பு: ஆர்பி உதயகுமார்

SCROLL FOR NEXT