சிறுவர்மணி

நூல் புதிது!

தினமணி

மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்!

(அ1.செட்டி நாட்டுச் சிறுகதைகள்)
ஆசிரியர் - சீத்தலைச் சாத்தன்.
பக்கம் - 120
விலை - ரூ 100/-

எதுவும் நடக்கும்,.... உப்பு மூட்டை,.... கல்லுக்குள் இருக்கும் தேரையும் உயிர் வாழும்,... எதுவும் கடந்து போகும்....முதலிய 16 கதைகள்! அத்தனையும் அருமையாக எழுதப்பட்டுள்ளன. கருத்துக்கள் செறிந்த கதைகள். இந்தத் தொகுப்பில், ஜானகி ராமனாதன் எழுதிய 5 கதைகளும், வ.திவ்ய லட்சுமி எழுதிய 3 கதைகளும், ஸ்ரீகா ஸ்ரீராம் எழுதிய "கைண்ட்னஸ்' என்ற ஆங்கில சின்னஞ்சிறு கதையும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்தும் அருமையாக, சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளன. நல்முத்துகள். வெளியிட்டோர் - ஒப்பில்லாள் பதிப்பகம், 17 - 4 - 2 - 2 ஏ, செட்டிய தெரு, பாரதி நகர், திருப்பத்தூர் - 63-211,சிவகங்கை மாவட்டம். கைபேசி - 9842490447.

குறள் நெறிக் கதைகள்

ஆசிரியர் - ருக்மணி சேஷசாயி
பக்கம் - 88
விலை - ரூ 90/-

ஆறாத வடு,... சான்றோர் வினை,... பதறாத காரியம் சிதறாது,.... எதிலும் அளவு தேவை.... ஆகிய 15 மிகச் சிறந்த கதைகள்! மிக நன்றாக எழுதப்பட்ட கதைகள்! கருத்துச் செறிவுடன் காட்சிகளுடன் சிறப்பாக உள்ள கதைகள்! வெளியிட்டோர் - சாயி பதிப்பகம், 6/18, மேற்கு வன்னியர் தெரு, மேற்கு கே.கே.நகர், சென்னை - 600078. கைபேசி - 9444799569.

ஜப்பான் நாட்டுச் சிறுகதைகள்

ஆசிரியர் - அரு . வி . சிவபாரதி.
பக்கம் - 96
விலை - ரூ 80/-

வெட்டி வேலை,.... இரண்டும் ஒன்றுதான்,.... கடல் ராஜன் மகள்,.... நன்றி,.... முதலான 21 மிக அருமையான மொழிபெயர்ப்புக் கதைகள். உள்ளே இருக்கும் ஒரு சிறுமியின் லோகோ அனைவரையும் கவரும்! அனைத்துக் கதைகளும் சுவாரசியமும், கற்பனை வளமும் நிறைந்தவை . குழந்தைகளுக்கு ஒரு அருமையான விருந்து. வெளியிட்டோர் - ஜீவா பதிப்பகம், 12/28, செளந்தரராஜன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600017, கைபேசி - 9952079787.

பினாக்கியோவின் சாகசங்கள்

(உலகப் புகழ் பெற்ற சிறுகதைகள்)
ஆசிரியர் - எச் . கிருஷ்ணமூர்த்தி
பக்கம் - 120
விலை - ரூ 125/-

இந்த நூல் படிப்பதில் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி! பினாக்கியோவின் சாகசஙக்ள்,... டாம் பிரெளனின் பள்ளி நாட்கள்,.... டாம் மாமாவின் நல்ல இல்லம்,..... காட்டு அன்னங்கள்,..... இளவரசனும் ஏழைச் சிறுவனும்,..... தண்ணீர்க் குழந்தைகள்,..... மாலுமி சிந்துபாத்,..... முதலிய புகழ் பெற்ற ஏழு மேலை நாட்டுக் கதைகளில் சுருக்கமான தொகுப்பு இந்தக் கதைப்புத்தகம்! மனதைக் கொள்ளைகொள்ளும்படி எழுதியிருக்கிறார் ஆசிரியர். வெளியிட்டோர் - ஐந்திணைப் பதிப்பகம், ஏபி, 1108, தென்றல் காலனி, மூன்றாவது தெரு, மேற்கு அண்ணாநகர், சென்னை - 600040. கைபேசி - 9941460109.

செல்போன் பூதம்

(சிறிவர் விழிப்புணர்வு கதைகள்)
ஆசிரியர் - ஹாரிங்டன் ஹரிஹரன்,
பக்கம் - 88
விலை - ரூ 80/-

முத்து முத்தான பத்துக் கதைகள்! அனைத்துக் கதாபாத்திரங்களையும் பறவைகளாகவும் விலங்குகளாகவும் உருவாக்கி தன் கற்பனை வளத்தைக் கூட்டி மிக சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். அற்புதக் கதைகள்! வெளியிட்டோர் - பாவைமதி வெளியீடு, எண் . 55, வ.உ.சி.நகர், மார்கெட் தெரு, தண்டையார்ப்பேட்டை, சென்னை - 600081. கைபேசி - 9500114229.

குழந்தைகளுக்கு அறிவுக் கூர்மைக் கதைகள்


(வண்ணப் படங்களுடன்)
பக்கம் - 40
விலை - ரூ 60/-

வண்ண, வண்ணப் படங்களுடன் வழுவழு ஆர்ட் காகிதத்தில் மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது இந்தக் கதைப் புத்தகம். குழந்தைகள் பார்த்தவுடன் கையில் எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதில் ஐயமில்லை. பேசும் குகை,... சிங்கத்தின் வாயை முகர்ந்தால்,.... பங்கு பார்ப்பதில் சிக்கல்,.... குரங்கைச் சாப்பிட ஆசை,..... மரத்தில் தொங்கும் இதயம் ஆகிய அற்புதமான கதைகள் அடங்கிய புத்தகம் இது! வெளியிட்டோர் - நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 605003.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூந்தமல்லி அருகே ஹிந்து அமைப்புத் தலைவர் வெட்டிக் கொலை!

காங்கிரஸ் - பாஜக: திட்டங்களை ஒப்பிட்டு மோடி பிரசாரம்!

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT