சிறுவர்மணி

பாலா லீலா!

"நியூசிலாந்திலே நம்ம மாதிரி பள்ளிக்கூடப் பசங்க கடற்கரைக்குப் போய் "கடல் முள்ளெலிகள்' பற்றி ஆராய்ச்சி செய்யப் புறப்பட்டுப் போயிருக்காங்க....அங்கே அவங்க ஒரு ஆச்சரியமான ஒரு விஷயத்தைக் கண்டுபிடிச்சிருக்கா

சுமன்

""ஹாய் பாலா,.... விஷயம் தெரியுமா?''
""என்ன சொல்லு லீலா....''
""நியூசிலாந்திலே நம்ம மாதிரி பள்ளிக்கூடப் பசங்க கடற்கரைக்குப் போய் "கடல் முள்ளெலிகள்' பற்றி ஆராய்ச்சி செய்யப் புறப்பட்டுப் போயிருக்காங்க....அங்கே அவங்க ஒரு ஆச்சரியமான ஒரு விஷயத்தைக் கண்டுபிடிச்சிருக்காங்க.... ''
""என்ன அது?''
""பசங்க கடற்கரையோரம்  இருக்கிற பாறைப் பகுதிகளிலே எலும்புகள் மாதிரி படிமங்களைப் பார்த்திருக்காங்க.... ''
""ம்.... சரி,.... எனக்குப் பசிக்குது பிஸ்கெட் வெச்சிருக்கியா?''
""உனக்கு எப்பவும் தீனி ஞாபகம்தான்!..... சொல்றதைக் கேளு!''
""சாப்பிட்டுக்கிட்டே கேட்கலாம்னு பார்த்தேன்.... சரி, சொல்லு...''
""அந்த மாதிரிகளை எடுத்துக்கிட்டு ஆராய்ச்சியாளர்கள் கிட்டே கொடுத்திருக்காங்க.... அதிலே பசங்க பார்த்தது பெங்குவினோட படிமங்களாம்!''
""இதென்ன பெரிய விஷயம்?.... பசிக்குது!...''
""பெரிய விஷயம்தான்!.... அந்த படிமங்களை ஆராய்ச்சி செய்ததிலே அந்த பெங்குவின்கள் சுமார் 27 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவைகளாம்!.... உயரம் சுமார் 4 முதல் 5 அடி உயரமுள்ளவையாக இருந்திருக்கக்கூடும்னு சொல்றாங்க..... சுமார் 100 கிலோ எடையும் இருந்திருக்குமாம்.... ''
""சபாஷ்!.... மனுஷங்க சைஸ் இருக்கும் போலிருக்கு!..... ஜாலியா பெங்குவின்களோட தோள்லே ஒரு  கை போட்டுக்கிட்டு ஒரு கையிலே பிஸ்கட்டைக் கடிச்சுக்கிட்டே  நடக்கலாம் போலிருக்கு!....''
""ஆமா!.... அதற்கு "வேவேரா' ன்னு பேர் வெச்சிருக்காங்க..... ஏன்னா அந்த பெங்குவின் படிமம் அந்த நாட்டு வேவேரா என்னும் பெங்குவின் இனத்தைப் போலவே இருக்காம்!..... பசங்களுக்கு ரொம்ப சந்தோஷம்!.... "எங்களுக்கு போனஸ் கிடைச்சா மாதிரி இருக்கு!' அப்படீங்கறாங்க!.... இருக்காதா பின்னே,..... முள்ளெலி ஆராய்ச்சிக்குப் போனவங்களுக்கு இந்த மாதிரி விஷயம் கிடைச்சிருக்கே!.... இந்த விஷயம் தெரிந்து எல்லோரும் அந்த பள்ளிக்கூடப் பசங்களை வாழ்த்தியிருக்காங்க!''
""வெரிகுட்!.... நானும் அவங்களை வாழ்த்தறேன்!.... ஒரு டவுட் மாலா!....''
""என்ன?''
""பெங்குவின்கள் பிஸ்கெட் சாப்பிடுமா?''
""ஆரம்பிச்சிட்டியா?''
லீலா கையை ஓங்க பாலா ஓடுகிறான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏதோ நினைவுகள்... மாளவிகா மேனன்!

விசிக அலுவலகத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா: திருமாவளவன் பங்கேற்பு!

வாட்ஸ்ஆப்புக்கும் வந்துவிட்டது மோசடி கும்பல்! எச்சரிக்கை, எதற்காகவும் ஓ.டி.பி.யைப் பகிராதீர்கள்!

விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்!

தொழிலதிபர் சுட்டுக்கொலை தில்லியில் பயங்கரம்

SCROLL FOR NEXT