வெள்ளிமணி

நிகழ்வுகள்

தூத்துக்குடி மாவட்டம், திருமந்திரநகர், அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள்

DIN

மஹாகும்பாபிஷேகம்
தூத்துக்குடி மாவட்டம், திருமந்திரநகர், அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர், ராஜகோபுரம், விமானங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
நாள்: 8.9.2017, நேரம்: காலை 6.45 - 7.45 மணி.
***********
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகில் உள்ள மேலக்கொடுமலூரில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்!  இங்கு, அன்னை பராசக்தியிடம் பல ஆயுதங்களைப் பெற்று அசுரனை வதம் செய்தார் குமரப்பெருமான்.  இத்திருக்கோயிலில் திருப்பணிகள் முடிந்து மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 96296 54676/  98434 30230.
நாள்:10-9-2017, நேரம்: காலை 10.30 மணி.
- பொ.ஜெயச்சந்திரன்
**********
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், சிறுமுகையில் அமைந்துள்ளது ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயங்கள். அருள்மிகு சௌடேஸ்வரி அம்மனுக்கு  மஹா கும்பாபிஷேகமும்;  ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ சீதா,  லட்சுமணர்,  ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ராமாநுஜர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு மஹா சம்ப்ரோக்ஷணமும் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு: 98426 50799 / 98425 28261.
நாள்: 10.9.2017,  நேரம்: காலை 6.30 - 8.00 மணி.
*********
காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் வட்டம், திருமுடிவாக்கம், மதுரா வழுதலம்பேடு அருள்மிகு பிடாரி ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ செல்லியம்மனுக்கும் ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கும் மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. பக்தர்கள் இந்நிகழ்வில் பங்குகொண்டு அம்மனின் 
அருளைப் பெறலாம்.
நாள்: 10.9.2017,  நேரம்: காலை 9.00 - 10.30 மணி.
சம்வத்ஸராபிஷேகம்
சென்னை, நங்கநல்லூர், டி.என். ஜி. ஒ. காலனி, முதல் தெருவில் உள்ள ஸ்ரீ சக்திவிநாயகர் ஆலயத்தில் முதலாம் ஆண்டு சம்வத்ஸராபிஷேம் செப்டம்பர் -8 ஆம் தேதி நடைபெறுகின்றது.  மேலும் ஆலயத்திலுள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு, கலசாபிஷேகம், நாம சங்கீர்த்தனம் போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன.  பூர்வாங்க பூஜைகள், ஹோமங்கள் செப்டம்பர்-7 ஆம் தேதி ஆரம்பமாகின்றது.  
உழவாரப்பணி,  கூட்டு வழிபாடு
டி யு டி (பமஈ) குழுமத்தின் சார்பில் உழவாரப்பணி மற்றும் கூட்டு வழிபாடு, சென்னை,  கொளத்தூர்,  திருப்பதி நகரில் உள்ள திருமால் மருகன் ஆலயத்தில் செப்டம்பர் -17 ஆம் தேதி, காலை 9.00 மணிக்கு  தொடங்கி நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு : 79046 12352 / 96772 67266.
பவித்ரோத்ஸவம்
திருவண்ணாமலை மாவட்டம்,  வந்தவாசி அருகில் உள்ள ஆக்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது  பழைமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில். விவாகம் மற்றும் புத்திரபாக்கியத்திற்கு சிறப்புபெற்ற இக்கோயிலில் பவித்ரோத்ஸவம்  விசேஷமாக நடைபெறுகின்றது. காஞ்சிபுரத்திலிருந்து ஆக்கூர் செல்ல நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.  
தொடர்புக்கு: 94444 40194 / 95853 18603.
நாள்: 8.9.2017 - 10.9.2017.
திருப்பணி
தஞ்சாவூர் மாவட்டம், கருக்காக்கோட்டையில் வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் ஸ்ரீ திரௌபதை அம்மன், ஸ்ரீ வீரனார் ஆலயத்தில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் மஹாகும்பாபிஷேகமும் நடை
பெறவுள்ளது. 
தொடர்புக்கு: 94427 29664.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT