வெள்ளிமணி

தெளிவான முடிவை எடுப்பவர்கள் இந்த ராசிக்காரர்கள்: வாரப் பலன்கள்

DIN

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலில் வளர்ச்சி கிடைக்கும். பெற்றோரிடம் இணக்கமான சூழ்நிலை நிலவும். சொத்து விவகாரங்களில் அமைதியாக இருக்கவும்.

 உடல் உபாதைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் பணிகளை முழுமையாகப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் அலட்சியம் வேண்டாம். 

விவசாயிகள் சிவப்பு நிற பயிர்களால் லாபம் அடைவார்கள். அரசியல்வாதிகளுக்கு சாதனை புரிய வாய்ப்புண்டு. கலைத்துறையினருக்கு வெற்றி கிடைக்கும்.  பெண்கள் குடும்பப் பொறுப்புகளை ஏற்று,  நடத்துவார்கள். மாணவர்கள் கேளிக்கைகளில் பங்கேற்பர்.

சந்திராஷ்டமம்} இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

குடும்பத்தில்  உங்கள் பேச்சுக்கு  மதிப்பு அதிகரிக்கும்.    உங்களைப் பற்றி அறியும் சூழ்நிலை உருவாகும். மருத்துவச் செலவு உண்டாகாது.  

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பயணங்களால் நன்மை உண்டாகும்.

வியாபாரிகளுக்கு தடை விலகும்.  விவசாயிகளுக்கு பாசன வசதிகள் உண்டாகும். அரசியல்வாதிகள் சூழ்நிலைகளை ஆராய்ந்து பணியாற்றுவார்கள்.

கலைத்துறையினர் சாதனைகளைப் புரிவார்கள். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பேச்சை கேட்டு 
நடப்பார்கள்.

சந்திராஷ்டமம்}இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

அலைச்சல் குறையும், தெளிவான முடிவை எடுப்பீர்கள். கனவுகள் மெய்ப்படத் தொடங்கும்.  உங்களைத் தேடி பொறுப்புகள் வரும். 

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு.  வியாபாரிகளுக்கு வருவாய் அதிகரிக்கும்.  விவசாயிகள் புதிய நிலங்களை வாங்க முன்பணம் கொடுப்பார்கள். அரசியல்வாதிகள் பிறருக்கு உதவிகளைச் செய்வார்கள்.

கலைத்துறையினருக்கு புதிய கலைஞர்களின்  நட்பு கிடைக்கும்.  பெண்கள் ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன்  ஈடுபடுவார்கள்.  மாணவர்கள் படிப்பில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.  திட்டமிட்ட செயல்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு.  வியாபாரிகள் வருவாய் அதிகரிக்கும் விவசாயிகள் பிறரை அனுசரித்துச் செல்வார்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும்.  பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவார்கள். மாணவர்கள் விளையாட்டில் கடினமாக ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம், மனவளம் சீராகும்.  உறவினர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள். குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள்.

மருத்துவச் செலவுகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் விட்டுக் கொடுத்து நடப்பார்கள்.  வியாபாரிகள் வளர்ச்சியைக் காண்பார்கள். விவசாயிகளின் பணிகள் சுமுகமாக நடைபெறும்.

அரசியல்வாதிகள் தன்னலம் கருதாது கட்சிப் பணியாற்றுவார்கள். கலைத்துறையினருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பெண்களுக்கு கடன் தொல்லை இருக்காது. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்} இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மக்கள்பேறு உண்டாகும்.  வழக்குகளில் எதிர்பார்த்தபடியே முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்களும் கைகூடும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். விவசாயிகளுக்கு தானிய விற்பனை சிறப்பாக நடக்கும்.

அரசியல் வாதிகளை கட்சி மேலிடம் கொண்டாடும். கலைத்துறையினருக்கு வருவாய் அதிகரிக்கும்.  பெண்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் உயர்வடைவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

சொத்துகளை வாங்குவீர்கள்.  பெற்றோரின் உடல் உபாதைகள் நீங்கும். பூர்விக சொத்துகளில் வருவாய் கிடைக்கும். பிறரிடம் சகஜமாகப் பழகுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் உழைப்பால் வெற்றி பெறுவார்கள். வியாபாரிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். விவசாயிகளுக்கு வருவாய் சிறப்பாகவே இருக்கும்.  அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தைத் தொடர்புகொள்ளும்போது, உஷாராக இருக்கவும்.  

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். பெண்களுக்கு அந்தஸ்து உயரும். மாணவர்கள் ஆசிரியர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

விலகியிருந்த உறவினர்கள் இணைவார்கள்.  உறவினர்களுடன் சமநிலை தொடரும். தன்னம்பிக்கையுடனும் சுறுசுறுப்புடனும் பணியாற்றுவீர்கள்.

குழப்பங்கள் தீரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பயிற்சிகளில் வெற்றி பெறுவார்கள்.  வியாபாரிகளுக்குத் தொடர்ந்து வந்த தடைகளும் நீங்கிவிடும்.

விவசாயிகளுக்கு குடும்பத்தில் நிம்மதி நிறையும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் ஆதரவு கொடுப்பார்கள்.  கலைத்துறையினர் பிறருக்கு உதவிகளைச் செய்வார்கள்.  பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள்.

மாணவர்கள் பிறரிடம் சகஜமாகப் பழகுவார்கள்.
சந்திராஷ்டமம்} 9,10,11.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம்  மேம்படும்.   பங்கு வர்த்தகத்தில் சிறிது லாபம் கிடைக்கும். எதிர்ப்புகள் மறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் - வாங்கல் விஷயம் சாதகமாக முடிவடையும். விவசாயிகள் விளைச்சலில் மேன்மையைக் காண்பார்கள்.  

அரசியல் வாதிகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு உதவுவார்கள்.  பெண்களுக்கு அந்தஸ்து உயரத் தொடங்கும். 

மாணவர்கள் மனதுக்கு இனிய பயணங்களைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம்} 12,13.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

மருத்துவச் செலவுகள் ஏற்படாது.  பிறரால் பாராட்டப்படுவீர்கள்.  உடன் பிறந்தோருக்கு உதவிகளைச் செய்வீர்கள்.  மனதில் இருந்து வந்த குழப்பம் தீரும்.

உத்தியோகஸ்தர்கள் பிறரால் பிரச்னை நேரிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரிகள் அகலக்கால் வைக்க வேண்டாம். விவசாயிகள் லாபம் அதிகரிக்கும்.  அரசியல் வாதிகளுக்கு நாவடக்கம் தேவை.

கலைத்துறையினர் பாராட்டுகளைப் பெறுவார்கள்.  பெண்கள் ஆகாரத்தையும், தக்க ஓய்வையும் எடுத்துக் கொள்வார்கள். மாணவர்கள் படிப்பில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்ப்பார்கள்.

சந்திராஷ்டமம்} 14,15.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பெரும்பாலான பிரச்னைகளுக்கு முடிவு தெரியும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.  சொத்துகளில் இருந்து வந்த இடையூறுகள் அகலும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளைக் குறித்த காலத்துக்குள் முடிப்பீர்கள். வியாபாரிகள் பயணங்களால் நன்மை அடைவார்கள். 

விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவார்கள். அரசியல்வாதிகள் பிறரிடம் ரகசியங்களைப் பகிர வேண்டாம்.  கலைத்துறையினர்  பிறரை வழி
நடத்துவார்கள். பெண்கள் புதிய வாகனங்களை வாங்குவார்கள். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழில் ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள்.  பிறரிடம் ஆலோசனைகளைக் கேட்பீர்கள்.  முயற்சிகள் செயல் வடிவம் பெறும்.

குடும்பத் தேவைகள் பூர்த்தியடையும். உத்தியோகஸ்தர்கள் வீண்விவாதங்களைத் தவிர்த்து, வேலையில் கவனம் செலுத்தவும்.

வியாபாரிகளுக்கு கடன் வசூலாகும்.  விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும்.  அரசியல்வாதிகளுக்கு உள்கட்சிப் பூசல் ஏற்படாது.

கலைத்துறையினருக்கு வாய்ப்பு கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: வாராணசியில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி

அக்னிவீா் வாயு தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

செவிலியா் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு

லோகோ ரன்னிங் பிரிவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT