வெள்ளிமணி

நிகழ்வுகள்...

DIN


கும்பாபிஷேகம்
திருவள்ளூர் மாவட்டம் (செஞ்சி) பானம்பாக்கம் ரயில் நிலையம் அருகேயுள்ள  அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை கைலாசநாதர், சோளீஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி உடனுறை அபயப்ரத வரதராஜ கோயில் கும்பாபிஷேகம் செப். 9}ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

ஆராதனை
கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபகவந்நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானத்தில் மகானின் 330}ஆவது ஆராதனை மஹோத்ஸவம்  செப். 10 முதல் 23}ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  முக்கிய நாள்கள்: செப். 10} பௌர்ணமி திதி ஆராதனை,  19} அகண்டதாரா பஜனை, 22} குருநாதாள் மகா ஆராதனை, 23} ஆஞ்சநேய உத்ஸவம், விடையாற்றி உத்ஸவம்.  உத்ஸவ நாள்களில் காலையில் ஸ்ரீமத் ராமாயண மூல பாராயணமும்,  மாலை ராமாயண உபன்யாசமும் நடைபெறும்.

நாமகுரு ஆராதனை
சென்னை மேற்கு மாம்பலம் விநாயகம் தெருவில் உள்ள ஸ்ரீராம மந்திரம் } ஸ்ரீராம நாம வங்கி வளாகத்தில் ஸ்ரீபகவன் நாம போதேந்திராருக்கு நாமத்தால் ஆராதனை செப். 10 முதல் 23}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த வைபவத்தில் நாம பாராயாணம், புஷ்பாஞ்சலி, மலர் வெளியீடு, அன்னதான கைங்கர்யம் ஆகியன நடைபெறும்.
தொடர்புக்கு} 8754 000600, 044}2489 3786.

அகண்டநாம ஸங்கீர்த்தனம்
அரக்கோணம் காவனூர் சாலை அருகே அருணாச்சலம் ரெட்டி தெருவில் உள்ள ஸ்ரீநந்தீஸ்வரர் கோயிலில்,  திருப்பாணாழ்வார் பஜன் மண்டலி சார்பில் 2}ஆம் ஆண்டு அகண்டநாம ஸங்கீர்த்தனம் செப். 18 (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 9 மணி வரை நடைபெறுகிறது.   பூஜை விவரம்: காலை 5} அகண்ட தீபம் ஏற்றுதல், 5.30} வேள்வி தொடக்கம், 6 மணி} கோ பூஜை தொடக்கம், 7 மணி} மஹா மந்த்ர பாராயண தொடக்கம்,  செப் 19 காலை 7}  மஹா மந்த்ர பாராயணம், லோக úக்ஷம அகண்ட வேள்வி பூர்ணாஹுதி, 7.15} ப்ருந்தாவன வஸந்தோத்ஸவம்.
தொடர்புக்கு- 9381221119.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

எலான் மஸ்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தோ்தல் முடிவை பிரதமா் கூறுவது எப்படி? பிரியங்கா கேள்வி

காஷ்மீரின் 3 தொகுதிகளில் களமிறங்காத பாஜக: வேறு வேட்பாளா்களை ஆதரிக்க ஆலோசனை

மாவோயிஸ்டு அச்சுறுத்தலால் வாக்களிக்காத கிராமம்

SCROLL FOR NEXT