வெள்ளிமணி

இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும்: வாரப்பலன்கள்

DIN

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (மே 19 முதல் மே 25) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம்
வருமானம் அதிகரிக்கும். செய்தொழிலில் திருப்பங்கள் ஏற்படும். தீயவர் களின் சூழ்ச்சிகளை அறிவீர்கள்.  நடையில் மிடுக்கு உண்டாகும்.  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக ரீதியான பயணங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவார்கள். விவசாயிகள் பிறரை அனுசரித்து நடப்பார்கள்.  அரசியல்வாதிகள் மேலிட ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். கலைத்துறையினர் சகக் கலைஞர்களை ஊக்குவிப்பார்கள்.  பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் புதிய பாடப் பிரிவுகளில் சேருவார்கள். 
சந்திராஷ்டமம்-இல்லை.

ரிஷபம்
செயல்களைச் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிரிகளும் ஆதரவாக இருப்பார்கள்.  எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குப் பண வரவு உண்டு. வியாபாரிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு. விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவார்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தின் கோபத்துக்கு உள்ளாகாமல் நடக்கவும். கலைத்துறையினர் கவலைகளை மறப்பார்கள். பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். மாணவர்கள் விளையாட்டுகளில் தீவிரமாக ஈடுபடுவார்கள்.

சந்திராஷ்டமம்-இல்லை.

மிதுனம்
தொழிலை திட்டமிட்டு நடத்துவீர்கள். நண்பர்களும் உதவுவார்கள். பெரியோர்களைச் சந்தித்து, மரியாதையை உயர்த்திக் கொள்வீர்கள்.  அரசு சலுகைகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் மனம் திறந்து பேச வேண்டாம். விவசாயிகளுக்கு குத்தகை பாக்கிகள் வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழல் உண்டு. கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெண்களுக்கு சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாணவர்கள் கவனமாகப் 
பேசவும்.

சந்திராஷ்டமம்-இல்லை.

கடகம்
இடையூறுகளைச் சமாளிப்பீர்கள்.  வாகனங்களைப் பழுது பார்க்க வேண்டியிருக்கும்.  மருத்துவச் செலவுகள் குறையும். மன அமைதி பெற கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள்.  உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவால் மனநிம்மதி கிடைக்கும். வியாபாரிகள் அநாவசியச் செலவுகளைச் செய்ய வேண்டாம். அரசியல்வாதிகள் தொண்டர்களின் மனக் கவலைகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு அந்தஸ்து கூடும். பெண்கள் குடும்பத்துடன் விழாக்களில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் பரிசுகளைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.

சிம்மம்
பொருளாதாரத்தில் நிம்மதி ஏற்படும். திட்டமிட்ட செயல்களில் வெற்றி கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.  பிள்ளைகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளைக் கண்காணிப்பார்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தள்ளிப் போடவும். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பார்கள். அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவார்கள்.  கலைத்துறையினர் குறை கூறுவோரை ஓரம் கட்டுவார்கள். பெண்கள் குடும்ப ஒற்றுமையைப் பேணி காப்பார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.

கன்னி
புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள்.  இல்லத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும்.  கடினமான வேலைகளைச் செய்வீர்கள். அந்தஸ்து உயரும்.  உத்தியோகஸ்தர்கள் முன்கூட்டியே வேலைகளை முடித்துவிடுவார்கள்.  வியாபாரிகள் முயற்சிக்கேற்ப லாபம் பெறுவார்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் வருமானம் உயரும்.  அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பெண்களுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
சந்திராஷ்டமம்- மே 19.

துலாம்
வருமானம் சீராக இருக்கும். புதிய தொழிலில் தடம் பதிப்பீர்கள்.  கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வயிற்று கோளாறு வந்து நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை யோசித்து செயல்படுத்துவார்கள். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி சிறிது குறையும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும்.  கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து நடப்பார்கள்.
சந்திராஷ்டமம்- மே 20,21.

விருச்சிகம்
வருமானம் இரட்டிப்பாகும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.  உடனிருப்போர் உதவியாக இருப்பார்கள்.  பங்கு வர்த்தகத்தில் வருமானம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைப்பீர்கள்.  வியாபாரிகளுக்கு சிரமங்கள் குறையும். விவசாயிகளுக்கு புழு பூச்சிகளால் பாதிப்பு இருக்காது.  அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்வார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்கள் குடும்பத்துடன் விழாக்களில் பங்கேற்பார்கள்.  மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.

சந்திராஷ்டமம்- மே 22,23.

தனுசு
செல்வாக்கு உயரும்.  போட்டிகளில் விலகி இருப்பீர்கள். தொழிலில் புதிய நூதன விஷயங்களை அறிவீர்கள்.  தேக ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவார்கள்.  வியாபாரிகளுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும்.  விவசாயிகள் கடமையை சரிவரச் செய்வார்கள். அரசியல்வாதிகளுக்கு அரசு உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு உயர்ந்தோரின் உதவி கிடைக்கும். 
பெண்கள் குறைகளைத் திருத்திக் கொள்வார்கள். மாணவர்கள் வேறு கல்வி நிலையங்களுக்கு மாறுவார்கள்.
சந்திராஷ்டமம்- மே 24,25.

மகரம்
தொழிலில் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள்.  குழந்தைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள்.  அவசரத்துக்கு சேமிப்பைப் பயன்படுத்துவீர்கள். சிறிய விஷயங்கள் மனதைச் 
சங்கடப்படுத்தும்.  உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.  வியாபாரிகள் விற்பனையைப் பெருக்குவார்கள்.  விவசாயிகளுக்கு 
மகசூல் பெருகும். அரசியல்வாதிகளுக்கு வெற்றி உண்டாகும். கலைத்துறையினர் புதிய படைப்புகளை உண்டாக்குவார்கள்.  பெண்கள் குடும்ப ஒற்றுமையைக் காண்பார்கள். மாணவர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்-இல்லை.

கும்பம்
வெளியூர் பயணங்களால் புத்துணர்வு அடைவீர்கள்.  தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.  வழக்குகளில் திருப்பங்கள் உண்டாகும்.  சிந்தனைகளை நேர்வழியில் செயல்படுத்துவீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு உள்ளாக மாட்டீர்கள்.  வியாபாரிகளுக்கு சிறிய 
சிரமங்கள் உண்டாகும்.  விவசாயிகளுக்கு நஷ்டங்
களைத் தவிர்ப்பார்கள். அரசியல்வாதிகள் போட்டிகளைத் தீர்த்து வைப்பீர்கள்.  கலைத்துறையினருக்கு 
நற்பெயர் கிடைக்கும்.  பெண்கள் மகிழ்ச்சியைக் காண்பார்கள். மாணவர்கள் கவனம் சிதறாமல் படிப்பார்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.

மீனம்
கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்.  செயல்களை விரைவாகச் செய்து முடிப்பீர்கள். உடல் நலம், மன வளம் மேம்படும். எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் பணிகளைப் பகிர்ந்துகொள்வார்கள்.  வியாபாரிகள் குறித்த இலக்குகளை எட்டுவார்கள். விவசாயிகள் நீர்பாசன வசதிகளை உயர்த்திக் காட்டுவார்கள். அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெற முயற்சிப்பார்கள். கலைத்துறையினருக்கு சங்கடங்கள் உண்டாகும். பெண்கள் கணவரிடம் அன்பைப் பெறுவார்கள். மாணவர்கள் பேச்சைக் குறைக்கவும்.
சந்திராஷ்டமம்-இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓஹோ.. எந்தன் பேபி!

இலங்கை பிரீமியர் லீக்கில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்!

இன்னமும் அமைதியான பார்வையாளராக இருக்க முடியாது: ம.பி. உயர் நீதிமன்றம்

அழகிய மோகினி! நபா நடேஷ்..

5 கட்டத் தேர்தல்களில் 310 இடங்களில் வெற்றி உறுதி - அமித் ஷா

SCROLL FOR NEXT