போர் விமான கொள்முதல் தொடர்பாக அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகளிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவிடமிருந்து எப்-15 ரக போர் விமானங்களை வாங்கும் வகையில் கத்தார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், ரூ.80,000 கோடி (1,200 கோடி டாலர்) மதிப்பிலான போர் விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கத்தார் கையெழுத்திட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ரூ.1.41 லட்சம் கோடி மதிப்பிலான போர் விமான கொள்முதல் தொடர்பான அறிவிப்பை அமெரிக்க ராணுவம் வெளியிட்டது. ஆனால், அந்த ஒப்பந்ததம்தான் இதுவா என்பது குறித்து எந்தத் தெளிவான தகவலும் இல்லை. மேலும், கத்தார்-அமெரிக்கா நாடுகளிடையிலான வலுவான ராணுவ உறவை பறைசாற்றும் வகையில் அமெரிக்க கடலோர காவல்படையின் இரண்டு கப்பல்கள் வியாழக்கிழமை கத்தாரை சென்றடைந்தது. பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக கூறி கத்தார் மீது அரபு நாடுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் கத்தாருக்கு சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 10,000 வீரர்கள் கத்தாரில் முகாமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.