அணு ஆயுதங்களை அடுத்தடுத்து பரிசோதனை செய்து மிரட்டி வரும் வட கொரியாவுக்கு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களை ஏற்றுமதி செய்ய முற்றிலுமாகத் தடை விதிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தில் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வட கொரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை மிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக அறிவித்தது. இதையடுத்து, கொரிய தீபகற்ப பிரதேசத்தில் பதற்ற நிலை அதிகரித்தது.
வட கொரிய விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்தியது. அந்த நாட்டின் மீது மிகக் கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியது. அதற்கான வரைவுத் தீர்மானத்தைத் தயாரித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் ஒப்புதலுக்கு அளித்தது. அந்த வரைவுத் தீர்மானத்தில் குறிப்பிட்டிருப்பது:
வட கொரியாவில் எந்த நாட்டு அரசும், எந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனமும் கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபடக் கூடாது என தடை விதிக்க வேண்டும். வட கொரிய அதிபரின் வெளிநாட்டு சொத்துகளை முடக்குதல், அந்த நாட்டின் ஆளும் கட்சியான கொரியா உழைப்பாளர் கட்சி வங்கிக் கணக்குகளை முடக்குதல், வட கொரிய அரசுக்கு சொந்தமாக வெளிநாட்டு வங்கிகளில் உள்ள சொத்துகளை முடக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க இயற்றிய வரைவுத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் வரும் செப். 11-ஆம் தேதி நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.