உலகம்

இந்தியாவுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: பாகிஸ்தானிடம் இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தல்

DIN

இந்தியாவுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என பாகிஸ்தானை சில செல்வாக்கு மிக்க இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் "தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' நாளிதழில் திங்கள்கிழமை வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சவூதியின் இணை வெளியுறவுத் துறை அமைச்சர் அதெல் அல்-ஜூபேர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா பின் அல்-நஹ்யான் ஆகியோர் இஸ்லாமாபாத்துக்கு கடந்த 3-ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த அமைச்சர்கள் இந்தியாவுடன் மறைமுகமான வகையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அந்தந்த நாடுகளின் தலைவர்கள் சார்பிலும், மேலும் சில செல்வாக்கு மிக்க  இஸ்லாமிய நாடுகளின் சார்பிலும் கேட்டுக் கொண்டனர்.
காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்க இம்ரான் கான் வாக்குவாதத்தைக் கைவிட்டு மென்மையான அணுகுமுறையை மேற்கொண்டு இந்திய தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியதாக அந்த நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சவூதி, ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் இம்ரான் கான்,  வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா ஆகியோரை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு மிகவும் ரகசியமாக நடைபெற்றதாகவும், ஒரு சில முக்கிய உயரதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் "தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கணவருக்கு எதிராக போட்டியிடும் மனைவி: சுவாரசிய தேர்தல் களம்!

SCROLL FOR NEXT