ரஷியாவில் 50 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி
ரஷியாவில் கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
ரஷியாவில் கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
உலக அளவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷியா 4-வது இடத்தில் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது.
தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்தும் நடவடிக்கையில் ரஷியா அரசு இறங்கியுள்ளது.
இந்த நிலையில் ரஷியாவில் கரோனா பலி எண்ணிக்கை தற்போது 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 585 பேர் பலியாகியுள்ளனர் இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 50,347ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 28,209 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,19,429 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 5,310 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. கரோனாவிலிருந்து ஒரேநாளில் 26,109 பேர் குணமடைந்தனர். இதுவரை 22,54,742 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.