உலகம்

ரஷியாவில் புதிதாக 5,267 பேருக்கு கரோனா; பாதிப்பு 8,71,894 ஆக அதிகரிப்பு!

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,267 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 8,71,894 ஆக அதிகரித்துள்ளது. 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நாட்டில் புதிதாக 5,267 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 8,71,894 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் உள்பட இதுவரை 14,606 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போது வரை 6,76,357 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரேநாளில் 7,331 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இன்றைய நிலவரப்படி, 2,45,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2.97 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் 684 பேர் உள்பட இதுவரை 2,45,468 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. முன்னதாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.300 கோடி மோசடி வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

‘தெக்கும் வடக்கும் அகக்கண் திறக்கும்’: கமல்ஹாசன்

தமிழக அரசு மருத்துவமனைகளில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

நான் முதல்வன் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்: ஸ்டாலின் பெருமிதம்

எப்படியிருக்கிறது துபை? புகைப்படங்களும் விடியோக்களும்

SCROLL FOR NEXT