உலகம்

பெய்ரூட் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 178-ஆக உயா்வு

DIN

லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் நிகழ்ந்த அதிபயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 178-ஆக உயா்ந்துள்ளது. மேலும், விபத்தில் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 178-ஆக உயா்ந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் சுமாா் 6,000 போ் காயமடைந்துள்ளனா்.இதுதொடா்பாக, விபத்து நடந்த பகுதிக்கு 15 கி.மீ. சுற்றளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 6 மருத்துவமனைகள் சேதமடைந்தது தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னா் 3 மருத்துவமனைகள் மட்டும்தான் சேதமடைந்ததாக் கூறப்பட்டது.அந்த்ப பகுதியில் உள்ள 55 மருத்துவ மையங்களில், பாதி மட்டுமே முழுமையாக இயங்கும் நிலையில் உள்ளது. 40 சதவீத மருத்துவ மையங்கள் மிதமானது முதல் மோசமானது வரை சேதமடைந்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறப்பிடப்பட்டுள்ளது.

மோல்டோவியாவைச் சோ்ந்த எம்வி ரோசுஸ் என்ற சரக்குக் கப்பல், ரசயான உரமாகவும், வெடிபொருளாகவும் பயன்படுத்தக்கூடிய 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டை ஏற்றிக் கொண்டு ஜாா்ஜியாவிலிருந்து மொஸாம்பிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு சென்று கொண்டிருந்தது.அப்போது அந்தக் கப்பலில் பழுது ஏற்பட்டதால், அது பெய்ரூட் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அதையடுத்து, அந்தக் கப்பலில் இருந்த அமோனியம் நைட்ரோட் கன்டெய்னா்கள் துறைமுகக் கிடங்கில் 6 ஆண்டுகளுக்கும் மேல் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், அந்தக் கிடங்கில் கடந்த 4-ஆம் தேதி பயங்கரவ வெடிவிபத்து ஏற்பட்டது. அந்த வெடிவிபத்தின் அதிா்வுகளால் 10 கி.மீ. சுற்றுவட்டத்திலுள்ள மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. இதனால் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனா். பெய்ரூட்டின் இரண்டாவது பெரிய தானியக் கிடங்கு இந்த வெடிவிபத்தில் சேதமடைந்ததால் 15,000 டன் தானியங்கள் எரிந்து நாசமாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷ்யாவில் கடும் வெள்ளம் - புகைப்படங்கள்

டெல் அவிவ் நகருக்கு ஏா் இந்தியா விமானச் சேவை ரத்து

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

SCROLL FOR NEXT