சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன்று(ஜன.28) பெய்ஜிங்கில் உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸுடன் சந்திப்பு நடத்தினார்.
தெட்ரோஸ் கூறுகையில்,
வூ ஹானில் கரோனா வைரலின் தாக்கம் ஏற்பட்ட பின், சீனா குறுகிய நேரத்தில் கரோனா வைரஸ் கிருமியின் மரபணுக்களைப் பிரித்து, உலகச் சுகாதார அமைப்பு மற்றும் இதர நாடுகளுடன் பகிர்ந்து கொண்டது.
சீனா மேற்கொண்டு வரும் துரித நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. உலகச் சுகாதார அமைப்பு, சீனாவுக்கு அனைத்து உதவியையும் வழங்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
தற்போது, சீனாவிலிருக்கும் வெளிநாட்டவர்களை தங்கள் நாட்டுக்குத் திரும்ப அழைக்கத் தேவையில்லை. நோய் பரவாமல் தடுக்கும் பணியில் சீனாவின் ஆற்றலின் மீது நம்பிக்கை கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்